Monday, June 29, 2009

குரல்களால் தீர்மானிக்கப்படுகிறவன் (அ) கொலைக்கு சாக்கு போக்கு சொல்லுதல்..


உன்னை கொலை செய்ய
விரும்பவில்லை.
ஆனால்
ஏதேதோ என்னை தூண்டுகிறது
உன்னை மட்டும் கொலை செய்ய.
காதலியை கொலைசெய்வது
பரமசுகம் என்கிறது உள்ளுக்குள்
ஒரு குரல்.
அவள் பிரிந்து சென்ற
நம்பிக்கை துரோகத்துக்கு
பழிவாங்க வேண்டுமென்கிறது
ஒரு குரல்.
உனக்கு கிடைக்காதவள்
வேறு எவனுக்கும் கிடைக்ககூடாதென்கிறது
ஒரு குரல்.
அவளை கொலை செய்துவிட்டு
நீயும் தற்கொலை செய்துகொள் என்கிறது
ஒரு குரல்.
குரல்களால் தீர்மானிக்கப்படுகிறேன்
நான்.

12.02.2009

  • ரொம்ப நாள் முன்னாடி எழுதி draft-ல் இருந்தது.. வேறு எதுவும் புதுசா எழுதவில்லை என்பதனால் இதை publish பண்ணிட்டேன்.. :)

21 Comments:

பாலா said...

yen intha kola veri

Nundhaa said...

auditory hallucination ? :)

நாணல் said...

ஏன் இந்த கொலைவெறி MSK?

அது சரி said...

எல்லையற்ற அன்பின் எல்லையை தேடினால் அது சில நேரங்களில் முடிவுரையாகவும் இருக்கக் கூடும்...

கவிதை நல்லாருக்கு சரவணன்...

அது சரி said...

ஆமா, போட்டிக்கு கதை எழுதறதா சொன்ன ஞாபகம்...எழுதியாச்சா இல்ல குவாட்டரை விட்டுட்டு குப்புற படுத்திட்டீங்களா?? :0))

சீக்கிரம் எழுதுங்க...இன்னும் ஒரு நாள் தான் இருக்கு...

ஜீவா said...

தயவு செய்து உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் . உங்களின் பக்கங்களை (கவிதைகளை என்பன) திருப்பி பார்த்தல் வெறும் கொலைகளும், ரத்தமும் என்றே உள்ளது . மனதில் வைத்து கொள்ளுங்கள் என்றாவது ஒரு நாள் உங்களின் புலம்பல்களை கேட்கும் கூட்டம் தொலைந்து போகும் ஆனால் உங்களின் புலம்பல்கள் தொடரும் யாருமற்ற வெளிதனில்...

நீங்கள் இதை பிரசுகரிக்க மாட்டிர்கள் என தெரியும். என் மனதுக்காக சொல்லிவிட்டேன் . சற்று திரும்பி பாருங்கள் .

தோழமையுடன்
ஜீவா

ரகசிய சிநேகிதி said...

// ரொம்ப நாள் முன்னாடி எழுதி draft-ல் இருந்தது.. வேறு எதுவும் புதுசா எழுதவில்லை என்பதனால் இதை publish பண்ணிட்டேன்.. :)//

இன்று அந்த எண்ணம் உங்களை விட்டு மறைந்திருக்கும் என்று நம்புகிறேன்
சரவணா...

உங்களால் என்றோ கொலை செய்யப்பட்ட இந்தக் கவிதை ..
இன்று தகனம் செய்யப்படுகிறது எங்கள் முன்னிலையில்..

gayathri said...

காதலியை கொலைசெய்வது
பரமசுகம் என்கிறது உள்ளுக்குள்
ஒரு குரல்

ada kadavule enna ithelem

Karthik said...

//கொலைக்கு சாக்கு போக்கு சொல்லுதல்..

ச்சே, கவிதையை படிக்கக்கூட வேண்டாம். எப்படிங்ணா பிடிக்கிறீங்க? சான்ஸே இல்ல. :)

கவிதை நல்லா இருக்கு. ஆனா எனக்கு தலைப்புதான் ரொம்ப பிடிச்சது. :)

Karthik said...

ஆமா போட்டிக்கான கதை எங்கே? பின்னிரவில் வெளியிட முடியாது. இன்னிக்குதான் லாஸ்ட் டேட். சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க. :)

Saravana Kumar MSK said...

@பாலா : சும்மாதானுங்க்னா.. நன்றி.

@Nundhaa : வாங்க தல. முதல் வருகைக்கு நன்றி. அதேதான்.. :)

@நாணல் : சும்மாதாங்க. நன்றி.

@அது சரி : நன்றிங்க்னா.. கதை எழுதல தல.. எதுவும் சிக்கல. :)

@ஜீவா : நன்றி. இங்கு பின்னூட்டம் மட்டுறுத்துவது இல்லை.. :)
உங்கள் கருத்தை ஏற்கிறேன்.. பார்க்கலாம்..

@ரகசிய சிநேகிதி : புரிதலுக்கு நன்றி தோழி. ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்து இருக்கீங்க.

@gayathri : சும்மா தான் காயூ.. :)

@Karthik : நன்றி தம்பி. தலைப்பும் படமும் மட்டும் புதுசு. தலைப்பு எனக்கும் புடிச்சிருந்தது.
கதை எழுதல. எதுவும் சிக்கல. :)

அன்புடன் அருணா said...

கொலை, தற்கொலைன்னா எனக்குப் பயம்பா!

நேசமித்ரன் said...

யாருமற்ற வெளியில் இருந்து கேட்கும் குரல்கள்
கேட்டு எல்லையற்ற அன்பைத் தேடும் கொலைகள்....
:)

ஸாவரியா said...

அன்பு சரவணன்,
இது மாதிரி கவிதை எழுதுங்க தப்பில்ல ஏன்னா அது ஒரு வடிகாலாக் கூட அமையலாமில்லையா..தோணுது எழுதறீங்க...எழுதுங்க,..பின்னால சுகமான சம்பங்களால் உங்கள் வாழ்க்கை நிறையும் போது,..உங்கள் கவிதையும் மாறும்

சினேகிதி
ஸாவரியா

ஆதிமூலகிருஷ்ணன் said...

இந்தக்கவிதை மட்டுமல்ல சரவணா உனது கொலை, தற்கொலை கவிதைகள் அனைத்திலுமே வன்மமோ, கழிவிரக்கமோ என்னால் உணரமுடியவில்லை.

இந்தக்கவிதையையும் மிக ரசித்தேன். தாளாத நிறைந்துவழியும் அன்புதான் இவ்வாறு வெளிப்படுகிறதென்றே நான் நினைக்கிறேன்.

ஸ்ரீமதி said...

அடப்பாவி?? :O

J said...

சரவணா உங்களுக்கு விருது காத்திருக்கு
என்னோட பதிவுல வந்திட்டு போங்க

reena said...

இதைப் படித்தால் தங்களுக்கு "ஆடிட்டரி ஹாலுசினேஷன்ஸ்" இருக்கும் என்றுதான் சந்தேகிக்க தோன்றுகிறது சரவணா... படிப்பவர் மன நிலையை பொறுத்து எத்தகைய தாக்கத்தை இம்மாதிரியான கவிதைகள் ஏற்படுத்தும் என்பதையும் சிந்தித்தால் நலம்.

மதுவதனன் மௌ. said...

அப்படியே அடுத்த கவிதையா...

குரல்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டேன் நான்

என்று கவுஜ எழுதாட்டி சரி...

Saravana Kumar MSK said...

@அன்புடன் அருணா : எனக்கும்தான் அக்கா..

@நேசமித்ரன் : நன்றிங்க..

@ஸாவரியா : அழகான புரிதலுக்கு நன்றி தோழி..

@ஆதிமூலகிருஷ்ணன் : நன்றிங்க்னா புரிதலுக்கு.

@ஸ்ரீமதி : ஹி ஹி ஹி

@J : விருதுக்கு நன்றிங்க..

@reena : ஆடிட்டரி ஹாலுசினேஷன்ஸ் இருக்கும் ஒருவனின் கவிதை.. படிப்பவரின் மனநிலையையும் இனி கருத்தில் கொள்கிறேன்.. நன்றிங்க.

@மதுவதனன் மௌ. : எப்போதுமே இப்படிதாங்க. நன்றி..

Sublime Remembrance said...

kolaiyil sirandha kolai
tharkolai
cause.......

Suicide is romantic with its intimacy.
Just you and whatever you imagine

  ©Template by Dicas Blogger.

TOPO