Monday, June 8, 2009

கண்ணாடியாலான கவிதை..


இக்கவிதையை படித்த பின்புதான்
என்னுடைய உண்மையான முகத்தை
நீ தெரிந்துக் கொண்டதாகவும்
நான் ஒரு துரோகி என்றும்
கொலைகாரன் என்றும்
சுயநலன்களுக்காக
பிறர் வாழ்வைக் கெடுக்கவும் துணிபவன்
என்றும்
மேலும் இன்ன பிற
கெட்டவார்த்தைகளாலும் திட்டிவிட்டு
நகர்ந்தாய்,
நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.

20.05.2009

28 Comments:

ச.பிரேம்குமார் said...

கண்ணாடி போலவே கவிதைகளும் இருந்துவிட்டால் நன்றாக தான் இருக்கும்.

yathra said...

சரா உங்கள் கவிதைகளை படித்து விட்டு உங்களை தவறாக புரிந்து கொண்டவருக்கு சரியான பதில்,

//நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.//

அருமையான கவிதை சரா.

ஆ.ஞானசேகரன் said...

//நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.//

நல்ல கர்ப்பனை நண்பா

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல இருக்கு சரவணன்.

பாலா said...

ullaththin yethaarththaththai pirathipalikkum kavithaikalai
seeranippathu konjam kastam

super bosss

அன்புடன் அருணா said...

Waiting for an extraordinary poem from u!

நட்புடன் ஜமால் said...

முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன் \\

நச்.

velji said...

உங்கள் கவிதை அகம் காட்டும் கண்னாடி!
பேசிக்கொண்டிருக்கையில் ஓங்கி குத்து விட்டது போல் இருந்தது,கடைசி வரிகள்!
'அட்டாக்' தொடரட்டும்!

மயாதி said...

கண்ணாடி போலவே கவிதைகளும் இருந்துவிட்டால் நன்றாக தான் இருக்கும்

super

எம்.ரிஷான் ஷெரீப் said...

:)
நல்ல கவிதை !

(தலைப்பில் 'க்' ஐ எடுத்துவிடுங்கள்.)

வெங்கிராஜா said...

பெண்புத்தி...!
அருமையான புனைவு.. :P

Karthik said...

நல்லாருக்குங்ணா!! :)

நீங்கள் ரொம்ப நல்லவர், வல்லவர், நேர்மையானவர்.

ஊப்ஸ், இது கண்ணாடியாலான கவிதையா? அப்படின்னா, நான் மேலே சொன்னது....? :))

தமிழன்-கறுப்பி... said...

அப்புறம்...

அனுஜன்யா said...

நல்லா இருக்கு சரா.

அனுஜன்யா

புதியவன் said...

//நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.//

வழக்கம் போல அருமையான கவிதை சரவணா...

Divyapriya said...

//நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.//

இது நச்!!!

Nundhaa said...

final touch சும்மா நச்-னு இருக்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்னதிது இன்னோர் அற்புதம்? யாத்ராவின் புரிதல்கள் இந்தக்கவிதைக்கு போதுமானது அல்ல.. அனுஜன்யாவின் பாராட்டும் இந்தக்கவிதைக்கு போதுமானதே அல்ல.!

அனுஜன்யா said...

@ ஆதி

சரா உன்னோட செல்லப் புள்ளன்னு உலகத்துக்கே தெரியுமப்பு :)

சரா லெவல் முற்றிலும் வேறு. என்னோட பாராட்டெல்லாம் நானும் சரா கவிதைகள் படிக்கிறேன்னு காமிச்சுக்கத்தான் :)

அனுஜன்யா

Saravana Kumar MSK said...

@ச.பிரேம்குமார் : கவிதை புரியலையா அண்ணா??

@yathra : நன்றி தல..

@ஆ.ஞானசேகரன் : நன்றிங்க்னா..

@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க முத்து..

@பாலா : நன்றிங்க பாலா..

@அன்புடன் அருணா : இது ரொம்ப ordinary-யா இருக்கா அக்கா??

@நட்புடன் ஜமால் : நன்றிங்க ஜமால் அண்ணா..

@velji : நன்றிங்க.

@மயாதி : நன்றிங்க.

@எம்.ரிஷான் ஷெரீப் : 'க்' ஐ எடுத்துவிட்டேன்.. நன்றிங்க ரிஷான்.

@வெங்கிராஜா : நன்றிங்க.. அது என்ன "பெண்புத்தி"??

@Karthik : நீ ரொம்ப நல்லவன்.. :)

@தமிழன்-கறுப்பி... : அப்பாலிக்கா..

@அனுஜன்யா : நன்றிங்க்னா..

@புதியவன் : நன்றிங்க்னா..

@Divyapriya : நன்றிங்க dp

@Nundhaa : வாங்க தல. முதல் முறையா வந்து இருக்கீங்க. நன்றி..

@ஆதிமூலகிருஷ்ணன் : நன்றிங்க்னா..

@ஆதிமூலகிருஷ்ணன் & அனுஜன்யா: அவ்வ்வ்வ்வ்.. கண்கலங்கி போச்சு.. நான் அம்புட்டு பெரிய ஆளெல்லாம் இல்லீங்க..

senkumars said...

சரவனா நான் உங்கள் கவிதைகளை கடந்த ஓரு வருடத்திற்கும்
மேலாக படித்து வருகின்றேன்...
எனக்கும் எழுத ஆர்வம் தந்தது உங்கள் கவிதைகள் தான்...

கடந்த சில மாதமாக சில கவிதைகளை எழுதி இருக்கின்றேன்...

உங்கள் வருகையை எதிர்பார்கும் என் வலைபக்கம்...
http://senkumars07.blogspot.com/

அது சரி said...

எல்லா பிம்பங்களும் கண்ணாடியால் ஆனவையே...
சில கெட்டிக் கண்ணாடி...உடைய நாளாகும்
சில மட்டக் கண்ணாடி...உடனே போகும்..

(வழக்கம் போல சிக்ஸர் சரவணா!)

ச.பிரேம்குமார் said...

நான் புரிஞ்சிக்கிட்டது சரியா தப்பான்னு தெரியல சரவணா!!

நந்தா said...

சரவணகுமார் மிகா அழகான கவிதை. உங்களது சமீப காலக் கவிதைகளில் புதிய புதிய பரிணாமங்களைத் தொட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள்.

மேலும் தொடர வாழ்த்துக்கள்.

kartin said...

beauty!

Saravana Kumar MSK said...

@senkumars : நன்றிங்க.. நிச்சயம் உங்கள் தளத்திற்கு வருகிறேன்..

@அது சரி : நன்றிங்க்னா..

@ச.பிரேம்குமார் : எப்படி வேண்டுமானாலும் புரிஞ்சிக்கலாம்.. :)

@நந்தா : நன்றிங்க்னா..

@kartin : நன்றிங்க.

ஸ்ரீமதி said...

:))

சரவணகார்த்திகேயன் சி. said...

That's a goot one.
I have added it to the படித்தது / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2009/07/53.html

  ©Template by Dicas Blogger.

TOPO