Monday, June 1, 2009

அதிர்வுகள்..


இன்னமும்
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்
புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ..
என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்
உன்னிடம்
அதைத் தெரிவிக்க
மொழியும் இல்லாமல்
உன் பாதச்சுவடுகளை மோகித்து
கிடக்கிறேன்..

14.05.2009

25 Comments:

TKB காந்தி said...

வார்த்தைகள்யெல்லாம் அழகா கோர்த்திருக்கீங்க, நல்லா இருக்கு

நவன் said...

பின்னீட்டிங்க சரவணன்.. வார்த்தைகள் செலக்சன் பிரமாதம்

இனியவள் புனிதா said...

:-)

ஆ.முத்துராமலிங்கம் said...

நீண்ட இடைவைளை சரவனண்....
கவிதை நல்லா வந்திருக்கு.

நட்புடன் ஜமால் said...

என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளை\\


நல்லாயிருக்கு சரவணன்

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம் சும்மா அதிருதில்லே!!!!

ச.பிரேம்குமார் said...

மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துகள் சரவணா :)

sakthi said...

உன்னிடம்
அதைத் தெரிவிக்க
மொழியும் இல்லாமல்
உன் பாதச்சுவடுகளை மோகித்து
கிடக்கிறேன்..

அற்புதம் சரவணன்

வாழ்த்துக்கள்

gayathri said...

nalla iruku saravana

புதியவன் said...

//என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்//

அதிர்வுகளை வார்த்தைகளில் உணர முடிகிறது சரவணா...

வெங்கிராஜா said...

//புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ//

//உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்//

யப்பா.. பிரமாதம்!

J said...

நல்லா இருக்கு சரவணா

"எஞ்சி கிடக்கும் ஆழ்மனதின்
புலன்கள் பற்றியெரிய"
இப்படியிருந்தா?

Karthik said...

நல்லா இருக்குங்ணா! :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல கவிதை சரவணகுமார் !

yathra said...

நல்ல கவிதை சரா.

Saravana Kumar MSK said...

@TKB காந்தி : நன்றி காந்தி.

@நவன் : நன்றிங்க.

@இனியவள் புனிதா : நன்றி. :)

@ஆ.முத்துராமலிங்கம் : நன்றி கவிஞர்.

@நட்புடன் ஜமால் : நன்றிண்ணே..

@அன்புடன் அருணா : நன்றி அக்கா.. :)

@ச.பிரேம்குமார் : நன்றிங்க்னா..

@sakthi : நன்றிங்க..

@gayathri : நன்றி காயூ..

@புதியவன் : நன்றிங்க்னா..

@வெங்கிராஜா : நன்றிங்க.

@J : நன்றிங்க.

@ Karthik : நன்றி தம்பி.

@எம்.ரிஷான் ஷெரீப் : நன்றிங்க்னா..

@yathra : நன்றி தல.

Raghavendran D said...

:-)))

Divyapriya said...

வார்த்தைகளின் அழகிய கோர்வை...இத தான் ரொம்ப நாளா எதிர்பார்க்கிறோம்...அழகான கவிதை சரவணன்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

உன் தளத்துக்கு வரும் போதே விழிகள் விரிய பிரமிப்புடன் வந்துவிட்டால், வந்தபின் பிரமிக்கத் தேவையிருக்காது.

கவிநயா said...

//இன்னமும்
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்//

அருமையான பிரயோகம். கவிதை அழகா இருக்கு!

Saravana Kumar MSK said...

@Raghavendran D : நன்றிங்க.

@Divyapriya : இதை மாதிரி எழுதி ரொம்ப நாள் ஆச்சில்ல..

@ஆதிமூலகிருஷ்ணன் : உங்கள் பின்னூட்டம் பிரமிக்க வைக்கிறது அண்ணா.. :)

@கவிநயா : ரொம்ப நாள் கழிச்சி நம்ம தளம் பக்கம் வந்து இருக்கீங்க.. நன்றி.

அது சரி said...

//
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்
புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ..
//

படிக்கும் போதே உள்ளே ஏதோ பயணிக்கும் உணர்வு...

மதன் said...

எனக்குப் பிடிச்சுது..! :)

NESAMITHRAN said...

ஒரே முறை படித்தாலும்
மனசில் எஞ்சி விடுகிற சொற்கள்..
நல்ல கவிதை....
-நேசமித்ரன்

Anonymous said...

wow... excellent....no words :)

  ©Template by Dicas Blogger.

TOPO