Thursday, May 14, 2009

இரையாகுதல்...


பின்னிரவு மழை நாளொன்றில்
என் அறையில் நடந்த
சம்பவம் இது.

எப்படியோ உள்நுழைந்திருந்த அதற்கு,
வெளிறிப்போன முகத்தோடு
இருக்கும் என்னை
உறுமியபடியே
சுற்றி சுற்றி வந்து
மேலும் பயமுறுத்துவது
வேடிக்கையாக இருந்திருக்கூடும்..

அதிரவைத்த இடியொன்றினால்
மின்சாரம் துண்டாகி
சட்டென்று அறையை இருள் கவ்வ
நான் எங்கேனும்
தப்பித்திடுவேனோ என்ற எண்ணத்தில்
அவசரமாய் என் மீது பாய்ந்தது அது..

நான்
அதன் இரையாகி தீர்ந்திருந்தேன்
மின்சாரம் வருவதற்கு முன்பாகவே

05.05.2009

36 Comments:

Karthik said...

1st. will comment later. :)

ஸ்ரீமதி said...

2nd.. Padichittu varen.. :))

ஸ்ரீமதி said...

பாவி உள்ள நுழைஞ்சது பூனையா?? புலியா?? :O

அன்புடன் அருணா said...

எதையாவது எழுதி உன்னைத் தீர்த்துக் கொள்வதிலேயெ குறியாயிருக்கிறாய்!!!!
இப்போல்லாம் வலைப் பக்கம் ஆளையே காணோம்...நிறையப் படி சரவணா...வெறுமை போகும்
அன்புடன் அருணா

புதியவன் said...

இரண்டு மாதத்திற்கு முன்பு ‘பூனையாகுதல்’
இப்ப பூனைகே ’இரையாகுதல்’

அடுத்து என்ன ஆகப்போகுதோ...

//நான்
அதன் இரையாகி தீர்ந்திருந்தேன்
மின்சாரம் வருவதற்கு முன்பாகவே//

இந்த வரிகள் நல்லா இருக்கு சரவணா...

Saravana Kumar MSK said...

@Karthik : :)

@ஸ்ரீமதி : பூனையோ, புலியோ, கடந்தகால நினைவுகளோ, பிரிந்துபோன காதலியின் நினைவுகளோ, வெறும் பயமோ, கொலை (அ) தற்கொலை எண்ணமோ.. அல்லது வேறு எதுவோ.. ;)

@அன்புடன் அருணா : அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா.. உங்கள் வலைப்பக்கம் பக்கமும் வரணும்.. வரேன்.. :)

@புதியவன் : பூனைக்கு சாப்பாடு போடணும் இல்லையா.. :)

Karthik said...

//பூனையோ, புலியோ, கடந்தகால நினைவுகளோ, பிரிந்துபோன காதலியின் நினைவுகளோ, வெறும் பயமோ, கொலை (அ) தற்கொலை எண்ணமோ.. அல்லது வேறு எதுவோ.. ;)

HOW ROMANTIC!!

பயமா இருக்குங்ணா!! :))

ஆயில்யன் said...

//நான்
அதன் இரையாகி தீர்ந்திருந்தேன்
மின்சாரம் வருவதற்கு முன்பாகவே//

இரையாகிக்கொண்டிருந்தேன் அப்படிங்கற வரி கரீக்டா இருக்கும்ன்னு நான் பீல் பண்றேன் !

மத்தபடி ம்ம்

நடக்கட்டும் பூனை :)

Divyapriya said...

அது எதுன்னு தான் தெரியல...இங்க வந்து பாத்தப்புறம் தெரியுது...

//@ஸ்ரீமதி : பூனையோ, புலியோ, கடந்தகால நினைவுகளோ, பிரிந்துபோன காதலியின் நினைவுகளோ, வெறும் பயமோ, கொலை (அ) தற்கொலை எண்ணமோ.. அல்லது வேறு எதுவோ.. ;)//

உங்களுக்கு பூனைன்னா ரொம்ப பயமா? :))

அப்புறம் வர வர உங்க கவிதைகள்ல "பின்னிரவு" ங்கற வார்த்தையோட ஆதிக்கம் ரொம்ப ஜாஸ்தியாகிட்டே போகுது...எனக்கு தெரிஞ்சு பின்னிரவுல செய்ய வேண்டிய வேலை தூக்கம் ஒன்னு தான்..அத ஒழுங்கா செஞ்சா இந்த அது (கொலை (அ) தற்கொலை எண்ணம்) எல்லாம் தாக்க வாராதுன்னு நினைக்கறேன்...but anyways இதெல்லாம் சும்மா கவிதைக்காக உங்க கற்பனைன்னா ரொம்ப சந்தோஷம் :)

ச.முத்துவேல் said...

ரொம்ப நல்லாயிருக்குது.

ஸாவரியா said...

பின்னிரவுல ரொம்ப சிந்திக்கீறீங்கன்னு நினைக்கிறேன்...:-)
//பூனையோ, புலியோ, கடந்தகால நினைவுகளோ, பிரிந்துபோன காதலியின் நினைவுகளோ, வெறும் பயமோ, கொலை (அ) தற்கொலை எண்ணமோ.. அல்லது வேறு எதுவோ.. ;)//


இந்த வரிகள் இந்த கவிதையின் அர்த்தத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போய்ருச்சு. எல்லாம் கற்பனையா இல்ல நிஜமான்னு தெரில,..ஆனா அற்புதமா உள்ளத உள்ளபடி சொல்றீங்க

ஆயில்யன் said...

//Divyapriya said... வர வர உங்க கவிதைகள்ல "பின்னிரவு" ங்கற வார்த்தையோட ஆதிக்கம் ரொம்ப ஜாஸ்தியாகிட்டே போகுது...எனக்கு தெரிஞ்சு பின்னிரவுல செய்ய வேண்டிய வேலை தூக்கம் ஒன்னு தான்..அத ஒழுங்கா செஞ்சா இந்த அது (கொலை (அ) தற்கொலை எண்ணம்) எல்லாம் தாக்க வாராதுன்னு நினைக்கறேன்...but anyways இதெல்லாம் சும்மா கவிதைக்காக உங்க கற்பனைன்னா ரொம்ப சந்தோஷம் :)//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Mighty Maverick said...

தோழா. தற்கொலையோ அல்லது கொலையோ... அதற்கும் ஒரு தைரியம்வேண்டும். தற்கொலை செய்து கொள்வதென்பது கோழைகள் செய்யும் செயல்என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்... ஆனால் அது எவ்வளவு தைரியமானசெயல் தெரியுமா? ஒரு மேழுகுவர்த்தியினை கொளுத்தி அதனுள் விரல் வைக்கும்பொழுதினில் நமக்கு அதன் சூடு தெரியும்... அதனால் நாம் பயந்து நெருப்பினில்விரல் படாமல் பார்த்து கொள்கிறோம். ஆனால் நெருப்பினில் குளித்து தற்கொலைசெய்யும் பொது அந்த சூடு ஒரு பொருட்டு அல்ல...

அதற்காக நான் உங்களை ஆதரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். உங்களதுஅந்த தைரியத்தை வேறொரு சாதனை செய்யும் முயற்சியில் காட்டுங்கள். வெற்றியோ தோழ்வியோ நீங்கள் முயற்சி செய்தீர்கள் என்கின்றன பெயர்உங்களுக்கு கிட்டும். உங்களிடமிருந்து மீண்டும் இது போன்ற கவிதைகள் இதற்குபின் வராது என்று நம்புகிறேன் (அதாவது கொலை வெறியோ தற்கொலைஎன்னமோ வராதென்று நம்புகிறேன்)...

Mighty Maverick said...

மற்றுமொரு விஷயம் முந்தைய மறுமொழியில் சொல்லாமல் விட்டது... பின்னிரவு நேரத்தில் தான் அருமையான கவிதைகளும் கற்பனைகளும் வரும்... ஆகவே பின்னிரவு நேரத்தில் வருகின்ற அனைத்தையும் உதற வேண்டுமென்பதில்லை... உங்களிடமிருந்து பின்னிரவு நேர கவிதைகளை அனைவரும் நிச்சயம் எதிர்பார்க்கிறோம்...

ஆ.முத்துராமலிங்கம் said...

தப்பித்திடுவேனோ என்ற எண்ணத்தில்
அவசரமாய் என் மீது பாய்ந்தது அது..

நான்
அதன் இரையாகி தீர்ந்திருந்தேன்
மின்சாரம் வருவதற்கு முன்பாகவே/

நல்லா இருக்கு சரவணக்குமார்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாவ்.. எக்ஸெலண்ட்.. தொடர்க.. உன் கொலைப்பணி.!

yathra said...

நல்லாயிருக்கு சரவணா.

Saravana Kumar MSK said...

@Karthik : இன்னும் மனபிறழ்வு, மன பிம்பங்கள், ஆல்டர் ஈகோ மற்றும் இன்ன பிறக்களையும் சேர்த்துக்கொண்டால், இன்னும் ரொமாண்டிக்கா இருக்கும்.. :)

@ஆயில்யன் : வாங்கண்ணா.. நீங்க சொல்றமாதிரியே ஜமாய்ச்சிடலாம்.. :)

Divyapriya : ஹலோ.. இரவுல தூங்கறது பத்தி நீங்க சொல்றீங்களா..
இதெல்லாம் ச்சும்மா ஜாலிக்காக எழுதறேன்னு வச்சிக்கோங்களேன்.. ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு.. :)

@ச.முத்துவேல் : நன்றிங்க முத்துவேல்..

@ஸாவரியா : வழக்கம் போல் உற்சாகமான பின்னூட்டம்.. நன்றி.. :)

@Mighty Maverick : புரிதலுக்கு நன்றிங்க.. முதல் வருகைக்கும்தான்.. கவிதைகள் முன்முடிவுகளற்றே எழுதி கொண்டிருக்கிறேன்.. பார்க்கலாம்..

@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க நண்பரே..

@ஆதிமூலகிருஷ்ணன் : கொலையா.. நானா?? அண்ணே.. போலிசு கேசு ஆயிடப்போகுது..

@yathra : நன்றிங்க யாத்ரா..

ச.பிரேம்குமார் said...

நான் இந்த பக்கம் வரவே இல்லையே..........

ச.பிரேம்குமார் said...

//தற்கொலை செய்து கொள்வதென்பது கோழைகள் செய்யும் செயல்என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்... ஆனால் அது எவ்வளவு தைரியமானசெயல் தெரியுமா? //

அது சத்தியமாய் கோழைத்தனம் தான். அப்படியே அது தைரியமெனினும் அதை வாழ்வதில் காட்டித்தொலைக்கலாம்

ச.பிரேம்குமார் said...

உன்னைய சீக்கிரமே ஒருத்தங்க கையில பிடிச்சுக்கொடுக்கனும்னு நினைக்கிறேன். அப்போ தான் சரி வருவே ;-)

Saravana Kumar MSK said...

@ச.பிரேம்குமார் : வாங்கண்ணா.. அந்த ஒருத்தியைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்..
தற்கொலை, கொலை பத்தி அப்பாலிக்கா பேசுவோம்.. :)

ச.பிரேம்குமார் said...

//@ச.பிரேம்குமார் : வாங்கண்ணா.. அந்த ஒருத்தியைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன்..
தற்கொலை, கொலை பத்தி அப்பாலிக்கா பேசுவோம்.. :)//

அம்மா தாயே, நீ எங்கிருந்தாலும் சீக்கிரமா சரவணனை வந்து சேரும்மா.... உனக்கு புண்ணியமா போகும் :-)))

reena said...

உங்க வீட்டில இருக்கிறவங்களை இந்த கவிதை மற்றும் பின்னூட்டங்களை படிக்க சொல்லுங்க... பிறகு அந்த ஒருத்தியை அவங்களே தேடுவாங்க சரவணா.. கவிதை பயங்கரமா இருக்கு

reena said...

உங்க வீட்டில இருக்கிறவங்களை இந்த கவிதை மற்றும் பின்னூட்டங்களை படிக்க சொல்லுங்க... பிறகு அந்த ஒருத்தியை அவங்களே தேடுவாங்க சரவணா.. கவிதை பயங்கரமா இருக்கு

கலையரசன் said...

பக்கா! பக்கா!!
தொடர்ந்து எழுதுங்கள்..
நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!

நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
ஓட்ட குத்துங்க!!

gayathri said...

ஸ்ரீமதி said...
பாவி உள்ள நுழைஞ்சது பூனையா?? புலியா??


enakum athey santhegam than

gayathri said...

neega nt shift work panni panni ungaluku ennamo aidichi saravana

summa ok cooooooooooool

sakthi said...

vithyasama kalakarennga

valthukkal

Saravana Kumar MSK said...

@ச.பிரேம்குமார் : //அம்மா தாயே, நீ எங்கிருந்தாலும் சீக்கிரமா சரவணனை வந்து சேரும்மா.... உனக்கு புண்ணியமா போகும் :-)))//
அண்ணே.. நீங்க தெய்வம்னே.. உங்க வேண்டுதல் நிறைவேறட்டும்..

@reena : ரீனா, இந்த கவிதையே பயங்கரமா இருக்கா? இதெல்லாம் நம்ம பக்கத்துக்கு வரவங்களுக்கு இப்போ சாதாரணமா ஆயிருக்கும்.. உங்களுக்கும் பழகிடும்..
அப்பறம். வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் இதை படிச்சா, நான் என்ன ஆவது?

@கலையரசன் : நன்றிங்க..

@gayathri : காயூ, நானும் அப்படிதான் நினைக்கிறேன்.. இப்போக்கூட இதை ஆஃபிஸில் இருந்துதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..

@sakthi : நன்றிங்க சக்தி.

தமிழரசி said...

பூனைக்கு கவி படைத்தாய்
நீ புணர்ந்ததை விளக்கிட்டாய்.... பூனைக்கு எலி இரை உம் கவிதைக்கு இக்கதை இரை...

Karthik said...

//ச.பிரேம்குமார் said...
அம்மா தாயே, நீ எங்கிருந்தாலும் சீக்கிரமா சரவணனை வந்து சேரும்மா.... உனக்கு புண்ணியமா போகும் :-)))

இதே டோன்ல நான் வேறு எதையோ கேட்டிருக்கேனே! ;)

எஸ்கேப்!!

நீ
வரும் வரை
கவிதை எழுதியே
காலம் தள்ளவேண்டும் போலிருக்கிறது..
நீ வந்து விடு..
கவிதைகளை மூட்டை கட்டிவிட்டு
காதலிக்கலாம்..
:)

Poornima Saravana kumar said...

வாவ்!
கவிதை அருமையா இருக்குங்க!!

நாணல் said...

//ஸ்ரீமதி May 14, 2009 4:55 PM

பாவி உள்ள நுழைஞ்சது பூனையா?? புலியா?? :O//

repeatuu...

மண்குதிரை said...

welcome back saravana.

nice one........

Saravana Kumar MSK said...

@தமிழரசி : நன்றிங்க.

@ Karthik : அதேதாம்ப்பா..

@Poornima Saravana kumar : ரொம்ப நாள் கழிச்சி இந்த பக்கம் வந்து இருக்கீங்க.

@நாணல் : நன்றிங்க நாணல்.

@மண்குதிரை : நன்றி தல.

  ©Template by Dicas Blogger.

TOPO