Monday, May 4, 2009

..........


இப்போதைய மனநிலை
அவ்வளவு பதட்டம் மிகுந்ததாய்
இருக்கிறது..
வார்த்தைகளை ஒருமித்து
பிழைகள் இல்லாமல்
கோர்வையாய் சிந்தித்தல்/எழுதுதல் கூட
அத்தனை சிரமம் மிகுந்ததாய்
இருக்கிறது..
சிகரெட் பிடிக்கவோ அல்லது
மது அருந்தவோ பழகி இருந்திருந்தால்
கொஞ்சம் ஆசுவாசமாய்
இருந்திருக்குமோ..

20.04.2009

இப்போதெல்லாம் எதையும் எழுத முடியவில்லை. எதையும் சிந்திக்க கூட இல்லை. ஒரு வேளை என்னிடம் காலியாயிடுச்சோ. இல்லை, மனசு சோம்பேறி ஆயிடிச்சோ.. என்னவோ தெரியல.

ஒருவேளை அடுத்து இந்த தளத்தில் எதையும் பதிவிடாத பட்சத்தில், திரும்பி போயிடாதீங்க. திரைப்படங்களும் நானும் தளத்தில் சந்திக்கவும்.. ஒரு வாரத்திற்கு ஐந்து முதல் பத்து படங்கள் பார்ப்பதால் அந்த தளம் நிச்சயம் ஆக்டிவா இருக்கும்.. :)

20 Comments:

புதியவன் said...

//கோர்வையாய் சிந்தித்தல்/எழுதுதல் கூட
அத்தனை சிரமம் மிகுந்ததாய்
இருக்கிறது..//

அதான் கோர்வையா...அழகாத் தானே எழுதுறீங்க...

புதியவன் said...

//..........//

தொடர் புள்ளி வச்சிட்டு

//ஒரு வேளை என்னிடம் காலியாயிடுச்சோ//

இது என்ன கேள்வி...

சில நேரத்தில் எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றும் தொடர்ந்து எழுதுங்க சரவணன்...

ஸாவரியா said...

Same pinch. எனக்கு கூட அப்படித்தான் தோணுது,..,..எனக்கு காதல் காலியாடுச்சோன்னு தோணுது ..தளத்துக்கு கொஞ்ச நாள் விடுப்பு கொடுக்கலாமானு கூட நினைக்கிறேன்

ஆ.முத்துராமலிங்கம் said...

ஒரு வேளை என்னிடம் காலியாயிடுச்சோ. இல்லை, மனசு சோம்பேறி ஆயிடிச்சோ.. என்னவோ தெரியல.//

தீர்ந்திருக்காது சரவணக்குமார்,
சோம்பேரிப் பட்டு போயிருக்கும்
இன்னும் முயற்சிங்கள். உங்கள் கவிதைகள் எல்லாமே தணித்துவமானதாக இருந்தது நல்ல சிந்தனையாகவும் இருந்தது. இன்னும் கவிதைகள் எழுத என் வேண்டுகோள்!

திரைப்படங்களும் நானும் தளத்தில் சந்திக்கவும்..
கண்டிப்பா சந்திப்போம் நண்பா.

இக்கவிதையே நல்லாவே இருக்கின்றது.

ஸ்ரீமதி said...

சரியாகிடும் சரவணா :))

ச.பிரேம்குமார் said...

வாசிப்பை விட படங்கள் அதிகம் பார்ப்பதால் கூட இருக்கலாம். பதட்டம் எல்லாம் நீங்கி சீக்கிரமே மீண்டு கவிதைகளோடு வா :)

Saravana Kumar MSK said...

@புதியவன் : நன்றிங்க்னா உங்கள் ஊக்கத்திற்கு..

@ஸாவரியா : உங்களுக்குமா தோழி??

@ஆ.முத்துராமலிங்கம் : சொல்லமுடியாது.. நாளைக்கே கூட ஒரு கவிதையை பதிவிடலாம்.. ஆனா இப்போது எதுவும் இல்லை.. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

@ஸ்ரீமதி : பார்க்கலாம்.. :)

@ச.பிரேம்குமார் : அண்ணா.. நான் எப்போதுமே படங்கள் மட்டுமே பார்க்கும் விருப்பமுடையவன்.. வாசிப்பு எல்லாம் இப்போ கொஞ்ச நாளாதான்.. நன்றி.

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ படம் பார்த்தால் யோசிக்கவும் எழுதவும் நேரம் எங்கே கிடைக்கும் சரவணா???
அன்புடன் அருணா

ஆதிமூலகிருஷ்ணன் said...

பெரியவங்க சொல்றதை கேட்கலைன்னா அப்படித்தான் ஆகும்.!

Saravana Kumar MSK said...

@அன்புடன் அருணா : அப்படியில்லை அக்கா.. நான் சில வருடங்களாகவே படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. சமீப காலமாக அல்ல.. எனவே அது பிரச்சனை இல்லை.. மனசில் எதுவும் இல்லை.. அதுதான் பிரச்சனை.. :)

@ஆதிமூலகிருஷ்ணன் : அவ்வ்வ்வ்.. எனக்கு புரியலையே அண்ணா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹையா.. உனக்கே புரியலையா? அப்ப நீ கவிதை எழுதும்போது எங்களுக்கெல்லாம் எப்பிடி இருந்திருக்கும்?

சரி சரி அழுவாத.. உன் கவிதையின் கடைசி நாலு வரி படிச்சுப்பாரு.!

ச.பிரேம்குமார் said...

//சரி சரி அழுவாத.. உன் கவிதையின் கடைசி நாலு வரி படிச்சுப்பாரு.!//

ஆமூகி, இருக்குற ஒரு நல்ல புள்ளையையும் கெடுத்துராதீங்க...... :(

ச.பிரேம்குமார் said...

ஒரு வாரத்திற்கு ஐந்து முதல் பத்து என்ற எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது சரவணா. இது கூட ஒரு வித போதை தான் ;-)

Saravana Kumar MSK said...

@ஆதிமூலகிருஷ்ணன் : நீங்க கவிதைய பத்தி சொன்னீங்களா.. நான் குறிப்புகளை பத்தி சொல்றீங்களோ என்று நினைத்தேன்.. அன்று அப்படிதான் தோனுச்சு.. அதைத்தான் எழுதிவைத்தேன்.. :)

@ச.பிரேம்குமார் : உங்களின் அன்பும் அக்கறையும் சந்தோஷமா இருக்கு.
சினிமா நிச்சயம் ஒரு போதைதான்.. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது வாழ்க்கை..

Karthik said...

நிஜமாவே எ.கொ.ச இது? :(

குட்டியூண்டு ப்ரேக், ஓக்கே?

நான் உங்களோட பழைய கவிதைகள்லாம் படிக்கனும். படிச்சிட்டிருக்கேன். சீக்கிரம் வந்துடுங்க.

உங்க இன்னொரு ப்ளாக்கை பார்க்கிறேன்.

Karthik said...

//சிகரெட் பிடிக்கவோ அல்லது
மது அருந்தவோ பழகி இருந்திருந்தால்
கொஞ்சம் ஆசுவாசமாய்
இருந்திருக்குமோ..

யாராவது பதில் சொல்லுங்க!

Saravana Kumar MSK said...

@Karthik :பிரேக்ன்னு எதுவும் இல்லை.. எதாச்சும் எழுதினா, நாளைக்கே கூட பதிவு போடுவேன்.. :)

விஜய் said...

நல்லாத்தானேப்பா இருந்தீங்க. என்னாச்சு.விரைவில் உங்கள் கவிதை மழையில் எல்லாரையும் குளிப்பாட்டப் போகிறீர்கள் :-)

Saravana Kumar MSK said...

@விஜய் : நன்றிங்க்னா.. உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும்..

தமிழன்-கறுப்பி... said...

எனக்கிருக்கிற நிலமை இதுதான் மச்சி எதையுமே எழுத முடியல ஆனா சொற்கள் மட்டும் துரத்துகிறா மாதிரி ஒரு உணர்வு சில நாட்களாக இருந்து கொண்டிருக்கு...

\\
சிகரெட் பிடிக்கவோ அல்லது
மது அருந்தவோ பழகி இருந்திருந்தால்
கொஞ்சம் ஆசுவாசமாய்
இருந்திருக்குமோ
\\
ஆனா நீ இவ்வளவு கெட்டவன்னு நான் நினைக்கலைப்பா ;)

  ©Template by Dicas Blogger.

TOPO