சொல்லாமல் மறைத்த ஒன்றினால், இரண்டு கொலைகள் மற்றும் ஒரு தற்கொலை..
தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்..
அதற்கு முன்பாக
உன்னைக் கொலை செய்யத்
திட்டமிட்டிருக்கிறேன்..
உன்னிடமிருந்து
இதுநாள்வரை மறைத்திருந்த
அதை சொல்லிவிடவே எண்ணினேன்;
அல்லது ஒரு கடைசிக் கடிதமாக அதை எழுதி
உனக்குத் தெரியப்படுத்தவும் விரும்பினேன்..
ஒரு வேளை
உன்னிடம் அதை பகிர்ந்துவிடும் பட்சத்தில்
இந்தக் கொலை மற்றும் தற்கொலைக்கான
முன்காரணம் ஏதும்
இல்லாமற் போய்விடும் என்பதால்
அதை உனக்குத் தெரியப்படுத்தாமல்
உன்னைக் கொலை செய்யவும்
பின்பு தற்கொலை செய்து கொள்ளவும்
விரும்புகிறேன்..
21.04.2009


Naandhaan first?? :)
//அதை உனக்குத் தெரியப்படுத்தாமல்
உன்னைக் கொலை செய்யவும்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் முதல்ல வந்ததுக்கு இப்படி ஒரு தண்டனையா?? :((((((
/ஒரு வேளை
உன்னிடம் அதை பகிர்ந்துவிடும் பட்சத்தில்
இந்தக் கொலை மற்றும் தற்கொலைக்கான
முன்காரணம் ஏதும்
இல்லாமற் போய்விடும்/
இப்பதான் தெரிஞ்சிடிச்சில்ல?? atleast கொலை செய்ய போறீங்கன்னாவது :))))))
இருந்தாலும் இந்த கொலை, தற்கொலைங்கற வார்த்தைகள நீ ரொம்ப தான் டூ மச்சா யூஸ் பண்ற.. கொஞ்சம் குறைசிக்கோ... போலீஸ் பிடிச்சிட போகுது சந்தேக கேஸ்ல.. ;))))))))))
:((((((
எனக்கு கொலை தற்கொலைன்னால கொள்ள பயம்
தெரியத்தனமா வந்துட்டேன் என்னிய மன்னிச்சுடுங்க!
ஆஹா..! கொலை கவிதை பயமுறுத்துதே..!!!
ஏன் இந்த கொலை வெறி சரவணக்குமார்!
@ஸ்ரீமதி : ஹி ஹி.. உன் பின்னூட்டத்தை ரசித்தேன்.. கொஞ்சம் ஓவராதான் போறேனோ..
@ஆயில்யன் : ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்த உங்களை, பயமுறுத்திவிட்டேனோ..
@ஆ.முத்துராமலிங்கம் : சும்மாதாங்க நண்பரே.. :)
//தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்...//
ஏன்...?
//அதற்கு முன்பாக
உன்னைக் கொலை செய்யத்
திட்டமிட்டிருக்கிறேன்.//
எதற்கு...?
//உன்னைக் கொலை செய்யவும்
பின்பு தற்கொலை செய்து கொள்ளவும்
விரும்புகிறேன்..//
எப்படி...?
சரவணா திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு...?
அன்பின் சரவணக்குமார்,
தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாசிப்பு மனங்களை வசீகரித்து ஈர்க்கும் வித்தை உங்களுக்கு கைகூடியிருக்கிறது. சோர்வற்று இடையறாமல் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன். வாசுதேவன்
கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அருமை.
உன்னைக் கொலை செய்யவும்
eaan pa unaku intha kola veri
உங்க பதிவு மிக அருமை ...
After Reading this post i have become ur follower,
If you like my posts you can follow me ;) hope u like it
அடிக்கடி த்ரில்லர் சினிமா பார்க்கிறேன்னு நினைக்கிறேன்....ம்ம்ம்....கொஞ்சம் குறைச்சுப் பாரேன்!
அன்புடன் அருணா
சொன்னா கேக்க மாட்டியா?
ஒரு மடலனுப்பு...!
ஏன் இப்படி..எதுக்கு.. ஆனா நல்லா இருக்கு எப்பவுமே எதிலேயுமே வித்தியாசமான சிந்தனை.
கொஞ்சம் Optimistic-ஆவுமே யோசிக்கலாமே சரவணன்
//
உன்னிடம் அதை பகிர்ந்துவிடும் பட்சத்தில்
இந்தக் கொலை மற்றும் தற்கொலைக்கான
முன்காரணம் ஏதும்
இல்லாமற் போய்விடும் என்பதால்
//
இப்ப தான் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சில்ல...நிறுத்திடுங்க ;0)
எனக்கு ஏதோ புரியற மாதிரி இருக்கு...ஆனா அது எனக்கு புரியலை....
(பி.கு: நானும் கடவுளாக ட்ரை பண்ணி ஒரு கவுஜ எழுதியிருக்கேன்...கடைப் பக்கம் வந்து நாலு கல்லு விட்டுட்டு போறது??)
//ஒரு வேளை
உன்னிடம் அதை பகிர்ந்துவிடும் பட்சத்தில்//
கொல வுழும்.
நன்னாருக்கு.
முடியல :(
"போட்டுத்" தாக்குறீங்க...அது சரி நீங்க கடவுளையே கண்டம் பண்ண ட்ரை பண்ண பார்டி ஆச்சே... :)))
Jokes apart..
நல்ல கவிதை. சமீபத்திய உங்கள் கவிதை பலவும் நிச்சயம் நல்ல வாசிப்புக்குரியவை
//கடவுளையே கண்டம் பண்ண ட்ரை பண்ண பார்டி ஆச்சே...
you keep your reputaion intact.. ;)
சூப்பர்ப் ஆனால் கொஞ்சம் வெயிட் லெஸ்ஸா தெரியுது.. ஒருவேளை எனக்கு புரியாமல் இருக்கலாம்.. மறுபடி படிச்சு பார்க்கிறேன்.
உங்க கவிதைகள்ல இதேமாதிரி ஒண்ணு படிச்சமாதிரியே இருக்குங்க சரவணன்.
உங்க கவிதையெல்லாத்தையும் ஒன்னா ஒரு தொகுப்பா போடுங்க...அதுக்கு தலைப்பு நான் சொல்ல போறதில்லை :))
இந்த கவிதையில ரெட்டை கொலை விஷயம் நல்லா இருக்கு...
// ஸ்ரீமதி said...
இருந்தாலும் இந்த கொலை, தற்கொலைங்கற வார்த்தைகள நீ ரொம்ப தான் டூ மச்சா யூஸ் பண்ற.. கொஞ்சம் குறைசிக்கோ... போலீஸ் பிடிச்சிட போகுது சந்தேக கேஸ்ல.. ;))))))))))//
இதுக்கு ஒரு பெரிய repeat :)))
next கவிதையில ஜனனம், மகிழ்ச்சி, காதல், நட்பு இந்த மாதிரி இனிய வார்த்தைகள வச்சு போட்டா சந்தோஷப்படுவோம் எல்லாரும் :)
Super..
@புதியவன் : நன்றிங்க்னா..
@"அகநாழிகை" : நன்றிங்க.. நீங்கள் சொல்வது உற்சாகமாக இருக்கிறது.
@yathra : நன்றிங்க யாத்ரா..
@gayathri : சும்மாதாங்க காயூ..
@Suresh : நன்றிங்க..
@அன்புடன் அருணா : முயற்சி பண்ணி பார்க்கிறேன். :)
@தமிழன்-கறுப்பி... : ஏதாவது திட்ட போறீங்களா..
@Ramya Ramani : நன்றி ரம்யா.. முயற்சி பண்ணறேன்.. :)
@அது சரி : உங்கள் கவிதையை நீங்கள் எழுதிய அன்றே படித்துவிட்டேன்.. பின்னூட்டதான் முடியவில்லை.
@psycho : நன்றிங்க
@பிரேம்குமார் : ஏனுங்கணா..
@ஸாவரியா : எப்பவுமே எப்படி உற்சாகமா பின்னூட்டம் போடறீங்க..
@Karthik : அடுத்த தடவ இன்னும் முயற்சி பண்ணறேன்.
@TKB காந்தி : என்னங்க பண்றது.. அதே மனநிலை மீண்டும் மீண்டும் வருகிறதோ என்னவோ?
@Divyapriya : இந்த கவிதை தலைப்பே வச்சிடலாம்..
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ரொம்ப அந்நியமா இருக்கே.. ஹி ஹி ;)
@ஆதிமூலகிருஷ்ணன் : நன்றிங்க்னா..
//அடுத்த தடவ இன்னும் முயற்சி பண்ணறேன்.
நன்றி. ஆனால் நான் அப்படி மீன் பண்ணல. எனக்கு புரியலை போலன்னுதான் சொன்னேன். ட்ரை பண்றேன். :)
//ஸ்ரீமதி said...
இருந்தாலும் இந்த கொலை, தற்கொலைங்கற வார்த்தைகள நீ ரொம்ப தான் டூ மச்சா யூஸ் பண்ற.. கொஞ்சம் குறைசிக்கோ... போலீஸ் பிடிச்சிட போகுது சந்தேக கேஸ்ல.. ;))))))))))//
:))
ஏன் இந்த கொலைவெறி MSK..
கவிதை வித்தியாசமா இருக்கு... :)
Post a Comment