Thursday, April 16, 2009

தமிழ்ப் பின்நவீனத்துவமும்; ரமேஷ் பிரேமும்; பேச்சும் மறுபேச்சும்

இந்த பதிவுலகத்தில் அதிகமாக உபயோகபடுத்தப்படும் வார்த்தைகள் இரண்டு. 1.ரிப்பீட்டேய் ; 2.பின்நவீனத்துவம்
சில இழப்புகளின் பதிலீடாக தமிழ்ப் பதிவுலகம் பக்கம் வந்த எனக்கு, இந்த பின்நவீனத்துவம் என்கிற வார்த்தை முதலில் மிரட்சியை தந்தாலும், பின்பு, இது இன்னொரு வித தேடலை உருவாக்கும் என்று நம்ப துவங்கினேன். அதே நேரத்தில் பெரிய பசங்க சிலரின் எழுத்தின் சுவாரஸ்யம் காரணமாக, சில புத்தங்களின் அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. நகுலன் மற்றும் சாருவின் ஒரு நாவலை இருபது பக்கங்கள் கூட தாண்டமுடியாமல் வைத்துவிட்டேன்.. குருவி தலையில பனங்காயாகிவிட்டது.

அப்போது வாசிக்க துவங்கிய இரு கட்டுரை புத்தகங்கள்தாம் ரமேஷ்-பிரேமின் கட்டுரையும் கட்டுக்கதையும் மற்றும் பேச்சு-மறுபேச்சு.. நல்ல புத்தகங்கள். நிச்சயம் ஒரு பெரிய வாசிப்புக்கு தயார்படுத்தும். இந்த பதிவில் பேச்சு மறுபேச்சு புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையின் சில பத்திகளை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.

மேற்கின் பின்நவீனத்துவம் : பின்நவீனத்துவம் என்பது மேற்கின் தத்துவ, அரசியல், அழகியல் மரபுகளை மாற்று, உப தத்துவ, அழகியல், தத்துவ மரபுகளின் மூலம் கேள்விக்குட்படுத்தி, உள்வெளியாக ஆராய்ந்து, மாற்றுப் பார்வைகளை முன்வைத்த ஒரு தொகுப்பறிவு முறை. இதில் அறம் என்பதும், மற்றவற்றிக்கான இடம் என்பதும் முக்கிய இடம்வகிப்பவை. அதே சமயம் இது ஒற்றைத் தன்மை உடையதல்ல. பேரழிவை நிகழ்த்திய இரண்டு உலகப் போர்களைக் கண்டு ஃபாசசிம், ஸ்டாலிசம் என்ற போக்குகளால் தாக்கப்பட்ட ஐரோப்பிய அறிவுத்துறையினரும், கலைஞர்களும் அவர்களது தத்துவ மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்திய போது, பின்நவீனத்துவ நிலையைக் கண்டடைந்தனர். மேற்குலகின் வரலாறு, இறையியல், அரசியல், அறவியல் அனைத்தையும் மறுக்கவும், மறுபொருளாக்கம் செய்யவும் இக்காலம் பயன்பட்டது. எப்பொழுது நவீனத்துவமும், அறிவியக்கமும் தோன்றியதோ, அப்பொழுதே பின்நவீனத்திற்க்கான அடிப்படைக் கேள்விகளும் அங்கு உருவாகிவிட்டன. விமர்சன பார்வையும், அதிகார மறுப்பும் இதன் அடிப்படைகளாக அமைந்தவை. ஒற்றை மூலமும், ஒற்றை முடிவும் இல்லை என்று வேறுபாடுகளின், வித்தியாசங்களின் இருப்பை அங்கீகரித்து, அவற்றின் அழகைக் கொண்டாடுதல் இதன் முக்கியக் கூறு. மேற்கே மேற்கை சிதைவாக்கம் செய்துகொள்ளும் காலமே மேற்கின் பின்நவீனத்துவ இயக்கம் அல்லது போக்கு.

தமிழ்ப் பின்நவீனத்துவம் : ஆனால் இந்திய தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் என்பது வேறுபட்டது. வேறுபட்டு இருக்க வேண்டியது. தமிழில் நீண்ட மரபுடைய தத்துவ ஆய்வு நவீனத்தளத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை. முடிவுகள் மட்டுமே இங்கு வைக்கப்படுகின்றன. அவற்றை கண்டடையும் வழிகள் மறைக்கப்படுகின்றன. இதனால் தமிழ் பின்நவீனத்துவம் என்பது இன்னும் ஆய்ந்தறிய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றி ஆய்வு செய்யும் யாருக்கும், தமிழ் வரலாறு, தமிழின் மாற்று வரலாறு, தமிழ் உப மரபுகள், மாற்று சிந்தனைகள், இலக்கியப் பன்மை மரபுகள் பற்றிய அடிப்படையான மரபும், அக்கறையும் தேவை. தமிழிலக்கியத்தையும், இலக்கிய கோட்பாடுகளையும், தமிழிலுள்ள ஆயிரக்கணக்கான கதையாடல் வடிவங்களையும் முழுமையான நுண் வாசிப்பிலும், மறுவாசிப்பிலும் அணுகிய பிறகே, தமிழில் பின்நவீனத்துவம் பற்றியும் தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றியும் நாம் பேச முடியும்.

பின்நவீனத்துவ வாசிப்பு : பின்நவீனத்துவ நாவல் என்றோ, பின்நவீனத்துவ சிறுகதை என்றோ உலகில் எங்கும் எதுவும் இல்லை. பின்நவீனத்துவ வாசிப்பு மட்டுமே. Nouveau Roman, Meta Fiction நாவல், Hyper Reality நாவல், Sur-Fiction, Palimpsest History நாவல், Magical Realism நாவல், Ethnographic நாவல், Mythographic நாவல் என ஒவ்வொரு நாவலாசிரியரும், தமக்குகந்த அடையாளம் தந்து, தமது நாவல்களை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தையும் பின் நவீனத்துவ கால எழுத்துக்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டு, பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுத்துகிறார்கள். ஏனெனில் பழைய முறையிலான வாசிப்பு, எதையும் மேலோட்டமாக வாசித்து, ஒற்றை முடிவை, ஒற்றை மையத்தைக் கூறிவிடும். ஆனால், பின்நவீனத்துவ வாசிப்பு பலவகையாக பிரதியை அணுகி, அதன் பல தளங்களில் பயணப்பட்டு, அதுவும் ஒரு படைப்பு போல தன்னை வடிவமைத்து கொள்ளும். அதனால், பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீனத்துவ விமர்சனம், பின்நவீனத்துவ ஆய்வு போன்றவை மட்டும்தான் உண்டே தவிர, பின்நவீனத்துவ நாவல் என்று எதுவும் கிடையாது. அது மட்டும் அல்ல. பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீன காலப் பிரதிகளை மட்டும்தான் இப்படி பொறுப்புடன் ஆழமாக பன்முகத் தன்மையுடன் வாசிக்கும் என்பதல்ல; ஒரு வேத நூலையும், ஒரு மொழியில் முதன்முதலில் எழுதப்பட்ட புராணத்தையும் கூட சிரத்தையாக வாசிக்கும்.

தமிழில் எல்லாவிதமான கதையாடல்களும் வரவேண்டும். எதார்த்தவாத, இயற்கையியல்வாத, வெளிப்பாட்டிய வாத, மனப்பதிவு வாத, நினைவோட்ட உத்தியுள்ள, புராணத் தன்மையுள்ள, தொன்மத் தன்மையுள்ள, சித்தர் நடையுடைய, சொல்கதை மரபுள்ள, ஆவணப் படுத்தல் உத்தியுள்ள, வரலாற்று வாய்மொழி மரபுள்ள....... என நூற்றுக்கணக்கான கதையாடல்கள் பல்கிப் பெருகவேண்டும். இவற்றை பொறுப்புடன் வாசிப்பதுதான், வாசித்து அவற்றின் பன்முகத் தன்மையை பல தள அர்த்தத்தை வெளிப்படுத்துவதுதான் தமிழில் பின்நவீனத்துவத்தின் வேலை. இதில் பின்நவீனத்துவ உப்பு இல்லை. பின்நவீனத்துவ காரம் இல்லை என்று சொல்வது அரசியல் ஆதிக்கக் கதையாடல். இலக்கியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் : தமிழில் சங்க இயக்கியங்கள் தொடங்கி, இன்றைய சிறுகதைகள் வரை, உலக இலக்கியங்களுக்கு ஈடு செய்யும் ஏராளமான படைப்புகள் உள்ளன. அளவிலும் கூட, தமிழிலக்கியம் பெரும் பரப்பை உடையது. இவற்றை பலவகை சிந்தனை முறைகளை பின்னணியில் நுணுகி வாசித்து, உலக இலக்கியத் தளத்துடன் உரையாடலைத் தொடங்கவும், வளர்க்கவும் பின்நவீனத்துவப் பார்வையும், வாசிப்பும் மேலும் வழி அமைத்துத் தருகிறது. சிரத்தையுடன் அதைப் பயின்று, புதியன படைக்க வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் அறிவுத் தளமும் இயக்கமும் அழிந்து போகாமல் காப்பதற்கான காலத்தின் தேவை.

வாசகா; வாசகி : ஒரு நாவல் எழுதுவதென்பது எளிதான வேலை அல்ல. கடுமையான உழைப்பைக் கோருகிற விஷயம் அது. பன்முகப்பட்ட வாசிப்பும் பயிற்சியும் அதற்கு தேவை. என்பதனால் வாசிப்பு என்பதற்கும், பன்முகப்பட்ட வாசிப்பும் பயிற்சியும் உழைப்பும் தேவை.

-- தீராநதி டிசம்பர் 2003


புத்தகம் : பேச்சு - மறுபேச்சு (பின்நவீனத்துவம் நோக்கி)
எழுதியவர் : ரமேஷ்-பிரேம்
பதிப்பகம் : மருதா
விலை : Rs.150

நெற்றி பொட்டில் அடித்தாற்போல் இதுதான் பின்நவீனத்துவம் என்று சொல்வது அல்ல இக்கட்டுரை. மாறாக ஒரு எளிய வழியில் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள் : அய்யனாரின் இந்த பதிவு. இந்த பதிவுக்குள் சில சுட்டிகள் இருக்கும், அதை தொடரவும்.

Nouveau Roman, Meta Fiction, Hyper Reality, Sur-Fiction, Palimpsest History, Magical Realism, Ethnographic, Mythographic & etc - இந்தக் கூறுகளை அல்லது வகைகளை யாராவது விளக்கமாக எழுதியிருக்கிறார்களா அல்லது எழுத முன்வருவார்களா... உதவியாக இருக்கும்.. எனக்கு தெரிந்து, அனுஜன்யா, Magical Realism பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறார்.

மேலும், இந்த கட்டுரையை வாசிப்போர்கள் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களையோ சொல்லவோ, தொடர்புடைய சுட்டிகளை தெரியப்படுத்தவோ அல்லது சந்தேகங்களை கேட்கவோ கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வளர்மதியோ, அய்யனாரோ, சுந்தரோ, ஜமாலனோ, பைத்தியக்காரனோ, டிசே தமிழனோ, நாகார்ஜுனனோ மேலும் வலையில் இயங்கும் அத்தனை பெரிய தலைகளும், நமக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்தபதிவில் ரமேஷ்-பிரேமின் கொலை மற்றும் தற்கொலை பற்றி மற்றும் சக்கரவாளக் கோட்டம் கவிதைத் தொகுதிகள் பற்றி..
இந்தக்கட்டுரை பலரை சென்றடைய வேண்டுமென்று நான் ஆசைப்படுவதால், தமிழ்மணம், தமிழிஷ் வோட்டு போடவும்.. :)

17 Comments:

அது சரி said...

இந்த பதிவை புரிஞ்சிக்கவே பின் நவீனத்துவம் தெரியனும் போலருக்கே :0))

எனக்கு என்ன கேள்வின்னா...இந்த பின் நவீனத்துவத்துல வர்ற "பின்" தமிழ் பின்னா இல்ல இங்கிலிப்பீசு "Pin" நா??

ஞான் இப்ப ஓட்டு போட்டின்டு...பட்ஷே கும்மிக்கு பின்னே வருமாக்கும்...

பிரேம்குமார் said...

நானும் தான் மிரண்டு போனேன். உன்னுடைய இந்த பதிவு ரீடரில் படிக்கும் போது எம்மாம் பெரிய எழுத்துக்களில் தெரிஞ்சுதுப்பா....!!

பிரேம்குமார் said...

உன் வாசிப்பும் தேடலும் அதிகமாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் சரவணா

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

தமிழன்-கறுப்பி... said...

\\
சில இழப்புகளின் பதிலீடாக தமிழ்ப் பதிவுலகம் பக்கம் வந்த எனக்கு
\\

அது ஆரம்பத்தில் உன்னுடைய பதிவில் தெரிந்த விசயம் மச்சி ஆனால் பார்த்தாயா சில இழப்புகள் எதிர்பார்க்க முடியாத வாசல்களை திறந்து விடுகிறது இல்லையா...

இந்த பின் நவீனத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் மிகக் குறைவென்றுதான் நினைக்கிறேன் அய்னாரும் அடிக்கடி சொல்லுவார்...

தமிழில் போதுமான அளவுக்கு இதனை எழுதியிருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்...

மேயிக்கல் ரியலிசம் அதன் பெயரிலேயே புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கும் இந்த பகுப்பில் வந்த முக்கியமான பதிவர்களின் பதிவுகளை படித்தாலே ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம், அனுஜன்யா சின்ன விளக்கம் கூட கொடுத்திருப்பார்...

மற்றும் படிக்கு உன்னளவுக்கு எனக்கு ஆங்கில அறிவென்பது இல்லை மச்சி ஆனாலும் தமிழில் வாசிப்பதற்கே நிறைய இருக்கிறது அல்லது இனிமேல்தான் வாசிக்கவே ஆரம்பிக் வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி MSK...

ஸ்ரீமதி said...

அப்பறம் படிக்கிறேன் :))

அனுஜன்யா said...

சரா,

நல்ல பதிவு. கண்ணக் கட்டுது :)

உனக்கு 'சின்ன அய்யனார்' என்று பெயர் வைக்கலாமான்னு ஒரு யோசனை :)

அனுஜன்யா

Karthik said...

//பின்நவீனத்துவ நாவல் என்றோ, பின்நவீனத்துவ சிறுகதை என்றோ உலகில் எங்கும் எதுவும் இல்லை. பின்நவீனத்துவ வாசிப்பு மட்டுமே.

இது என்னவோ புரியறா மாதிரி இருக்கு.

பைத்தியக்காரன் said...

சரவணகுமார்,

வாசிப்பின் பயணத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

ஆங்கில வாசிப்பில் உங்களுக்கு பரிச்சயம் இருந்தால் சென்னை லேண்ட்மார்க் செல்லுங்கள். பி(றகான)ன் நவீனத்துவம் குறித்து ஏராளமான நூல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

தமிழிலிருந்து வாசிப்பை தொடங்க நினைத்தால், சாகித்ய அகதமி, 'பின் அமைப்பியல் - பின் நவீனத்துவம்' குறித்த ஒரு நூலை உருது மொழியிலிருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த தடிமனான நூல் உங்களுக்குள் புரிதலை உண்டாக்கலாம்.

அடையாளம் பதிப்பகம் தமிழவனின் அமைப்பியல் நூலை மறுபிரசுரம் செய்திருக்கிறது. இதே அடையாளம் பதிப்பகமே ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின் சிறு சிறு நூல்களை மொழியாக்கம் செய்து பல தலைப்புகளில் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் க. பூரணச்சந்திரன் மொழிபெயர்ப்பில் பின் அமைப்பியல் நூலும், பிரேம் மொழிபெயர்ப்பில் பின் நவீனத்துவம் நூலும் வெளியாகியிருக்கிறது.

காவ்யா பதிப்பகம் மேலும் இதழில் வெளிவந்த முக்கியமான கட்டுரைகளை தொகுத்து சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

இந்த நூல்கள் உங்களுக்கு உதவக்கூடும். சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள 'நியூ புக் லேண்ட்' கடையில் தமிழ் சிறுபத்திரிகை, ஜனரஞ்சக நூல்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

வலைத்தளத்தில் என்றால் நாகார்ஜுனன், ஜமாலன், வளர்மதி, பிரம்மராஜனின் 'மீட்சி'... ஆகிய வலைதளங்களை தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

வாசிப்பில் உங்கள் பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

gayathri said...

அது சரி said...
இந்த பதிவை புரிஞ்சிக்கவே பின் நவீனத்துவம் தெரியனும் போலருக்கே :0))

enakum than pa

gayathri said...

சில இழப்புகளின் பதிலீடாக தமிழ்ப் பதிவுலகம் பக்கம் வந்த எனக்கு

mmmm neraya per ippadi than pa intha oolagathuku vanthu irukanga

அன்புடன் அருணா said...

ம்ம்ம்......குருவி தலையில பனங்காயாகிவிட்டது இந்தப் பதிவு...நான் இந்த ஆட்டத்துக்கு வரல்லைப்பா!!!!!
அன்புடன் அருணா

Divyapriya said...

எனக்கு இதுக்கும் (பின்நவீநத்துவம்) சம்பந்தம் இல்லப்பா...:))

Saravana Kumar MSK said...

@அது சரி : என்ன கொடும சார் இது.. என்னை விட உங்களின் வாசிப்பின் பரப்பு அதிகம் என்பதை நான் நன்கு அறிவேன் நண்பரே. :)

@பிரேம்குமார் : நன்றிங்க்னா..

@தமிழினி : நன்றி..

@தமிழன்-கறுப்பி... : என்னதான் புது வாசல்கள் என்றாலும், இது விரும்பிய வாசல் அல்லவே.. காம்பரமைஸ் பண்ணி பண்ணியே வாழவேண்டியிருக்கிறது..
அப்பறம்.. இன்னொரு விஷயம்.. நானும் பீட்டருல ரொம்ப வீக்..

@ஸ்ரீமதி : ஓகே..

@அனுஜன்யா : இதெல்லாம் ரொம்ப ஓவருங்க்னா..

@Karthik : எனக்கும் அப்படிதான் இருக்கு. :)

@பைத்தியக்காரன் : வாங்க தல.. உங்கள நம்ம தளம் பக்கம் வரவைக்க, இப்படியெல்லாம் பொறி வைக்க வேண்டியிருக்கு.. ஹி ஹி ஹி..
தகவல்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. இன்னும் நிறைய படிக்க ஆவலாயிருக்கிறேன்.
எப்படியாவது பதிவுகள் போட ஆரம்பியுங்க.. நீங்க எங்கெல்லாம் பின்னூட்டம் போடுவீங்கன்னு தேடி படித்தல் ரொம்ப கஷ்டம்..

@gayathri : வாங்க காயூ.. நன்றி.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஷ்டம்.

@அன்புடன் அருணா : சும்மா ஒரு தடவ முழுசா படிச்சு பாருங்க.

@ Divyapriya : ஹலோ.. இப்படியெல்லாம் சொல்லி "எஸ்" ஆக முடியாது.. ஒரு தடவ முழுசா படிச்சு பாருங்க..

DJ said...

ச‌ர‌வ‌ண‌குமார்,
நீங்க‌ள் மேலே குறிப்பிட்ட‌ பிரேம்‍ ‍ ர‌மேஷின் இந்த‌ இரு தொகுப்புக்க‌ளையும் வாசிக்க‌வில்லை (வாசிப்ப‌த‌ற்கு ஆர்வ‌த்துட‌ன் தேடிய‌போதும் இன்ன‌மும் கிடைத்த‌பாடில்லை). என்னுடைய‌ ஞாப‌க‌ம் ச‌ரியானால், நீங்க‌ள் மேலே ப‌திந்துள்ள‌ தீராந்திக் க‌ட்டுரை, அத‌ற்கு முத‌ல் மாத‌ம் வ‌ந்த‌ தீராந‌தியில் பின் ந‌வீன‌த்துவ‌ம் என்றால் என்ன‌ என்ப‌த‌ற்கு அ.மார்க்ஸ்/சாரு நிவேதிதா/எம்.ஜி.சுரேஷ் போன்ற‌வ‌ர்க‌ள் ப‌தில‌ளித்த‌ற்கு எதிர்வினையாக‌வே பிரேம்‍-ர‌மேஷ் இதை எழுதியிருந்தார்க‌ள் என்று வாசித்த‌தாய் நினைவு.

பைத்திய‌க்கார‌ன் ஏற்க‌ன‌வே வாசிப்ப‌த‌ற்கான‌ ப‌ட்டிய‌லைத் த‌ந்திருக்கின்றார்க‌ள். ச‌ற்று வித்தியாச‌மாய் ம‌றுமுனையில் நின்று பின் ந‌வீன‌த்துவ‌த்துவ‌த்தைப் பார்க்க‌வேண்டுமென்றால், நூல‌க‌ம். நெற்றிலுள்ள‌ 'பின் ந‌வீன‌த்துவ‌ம்: மாயைக‌ளைக் க‌ட்ட‌விழ்ப்போம்' (http://74.220.219.81/~noolaham/project/30/2952/2952.pdf) என்ற‌ தொகுப்பை வாசித்துப் பாருங்க‌ள். முக்கிய‌மாய் என்.வேணுகோபால், சி.சிவ‌சேக‌ர‌ம் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ளில் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளை அவ‌தானியுங்கள். இவ‌ர்க‌ள் பின் ந‌வீன‌த்துவ‌த்தை ஆத‌ரிக்கின்ற‌வ‌ர்க‌ள் இல்லையென்ப‌தால், எதிர்ப்ப‌ர‌ப்பிலிருந்து பின் ந‌வீன‌த்துவ‌த்தை நோக்கிப் பார்ப்ப‌து ஒரு சுவார‌சிய‌மான‌ பார்வையைத் த‌ரும். முக்கிய‌மாய் எதையும் முடிந்த‌ முடிவாய்ப் பார்க்காம‌ல் ந‌ம‌து ம‌ன‌ங்க‌ளைத் திற‌ந்து வைத்திருந்தால் பின் ந‌வீன‌த்துவ‌தை ம‌ட்டும‌ல்ல‌, வேறு எந்த‌ப் புதிய‌ விட‌ய‌ம் என்றாலும் வாசித்து அறிய‌ முடியும் அல்ல‌வா?

Saravana Kumar MSK said...

@DJ : வாங்க தல. இந்த இரண்டு புத்தகங்களையும் இம்முறை நடந்த புத்தக கண்காட்சியில் வாங்கினேன். மேலும் இப்புத்தகங்களை வெளியிட்ட "மருதா", ஸ்டால் அமைக்கவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. வேறு ஒரு ஸ்டாலில் அதிர்ஷ்டவசமாக கிடைத்தது.
இந்த கட்டுரை அவர்கள் மூவருக்கான எதிர்வினையே தான்.. தகவல்களுக்கு மிக்க நன்றி. கோப்பை தரவிறக்கம் செய்தாயிற்று.. :)

ஆ.முத்துராமலிங்கம் said...

வாசிப்பை கூர்படுத்தியுள்ளீர்கள்
இப்பதிவை படித்ததில் பின்நவீனத்துவம்ன்னா என்னனு முழிபிதிங்கி இருந்த நான் அதனை நூல்ளவுக்கு புரிந்து கொண்டேன் என்று என்னுகின்றேன் சரவணன்.
படிக்கவேண்டிய பதிவு.
வாழ்த்துகள் சரவணன்.

  ©Template by Dicas Blogger.

TOPO