கவிதை பரவும் வெளியின் வரைபடம்..
உடலுக்குள்
கவிதை பரவும் வெளியின்
வரைபடம் தயாரிக்க திட்டமிட்டேன்..
ஒரு பெரிய வரைபட தாளும்,
பென்சிலும் எடுத்துக்கொண்டு,
ஏற்கனவே வாங்கி
பதப்படுத்தி வைத்திருந்த மனித உடலொன்றின்
வாய் வழி,
குப்பிகளில் வைத்திருந்த
பழையக் கவிதைகளை
ஒன்றொன்றாக செலுத்தி
கவிதை உடலுக்குள் பரவிய வெளியை
குறிப்பெடுக்கத் துவங்கினேன்..
சரியாக பதினேழாவதுக் குப்பியில் இருந்த
கவிதையை செலுத்திய போது
அவ்வுடல்
சிறகு கொண்ட பூனையாக மாற துவங்கியது..
பதினெட்டாவதுக் குப்பிக் கவிதையை
செலுத்துகையில்
கண்ணிமைக்கும் கணத்தில்
என்னையும்
மிச்சமிருந்த கவிதைக்குப்பிகளையும்
எடுத்து விழுங்கிவிட்டு
நெட்டி முறித்து
பறந்தது..
31.03.2009


class சரவணா!
மிக அருமையாக இருக்கு
வித்தியாசமான சிந்தனைகள்
சிறகு முளைத்த பூனையா?? அது எங்கு இருக்கிறது?
சிறகு முளைத்த பூனை super pa
பறந்த பூனையின்
நிழல்கள் தீண்டா பாதைகளில் உதிர்திருந்த ரோமங்களில் முளைத்துவிட்டிருந்தது
இன்னும்
பத்து குப்பிகளுக்கான கவிதைகள்...
நல்லா இருக்கு சரவணா :)))
நானும் கொஞ்சமா ட்ரை பண்ணேன்... உன்னளவுக்கு வரலைன்னு நினைக்கிறேன்.. :((
SuPeRb...! :)
ம்ம், இப்போவெல்லாம், கவிதையே கவிதையா பல ரூபங்களில் வருது உன்னிடம். பூனையாக, ரயிலாக, சிறகுடன் பறக்கும் பூனையாக .... நான் உன்னோட transformation ஐ இவற்றில் குறியீடாகப் பார்க்கிறேன்.
அனுஜன்யா
கலக்கல் :-)
//கவிதையை செலுத்திய போது
அவ்வுடல்
சிறகு கொண்ட பூனையாக மாற துவங்கியது..//
நல்லா இருக்கு சரவணா இந்த வித்தியாசமான கவிதை...
@நட்புடன் ஜமால் : நன்றிங்க்னா..
@பிரேம்குமார் : படத்தில் இருக்கு பாருங்க.. இந்த கவிதையை எழுதினதும் அதுதான்..
@gayathri : நன்றி காயூ..
@ஸ்ரீமதி : நன்றி ஸ்ரீ..
//பறந்த பூனையின்
நிழல்கள் தீண்டா பாதைகளில் உதிர்திருந்த ரோமங்களில் முளைத்துவிட்டிருந்தது
இன்னும்
பத்து குப்பிகளுக்கான கவிதைகள்...//
கலக்கல்.. நல்லா இருக்கு.. :)
@Karthik : நன்றி கார்த்திக்..
@அனுஜன்யா : நன்றிங்க்னா..
@சென்ஷி : நன்றிங்க்னா..
@புதியவன் : நன்றிங்க்னா..
vidhyaasamaana sindhanaiyaa irukku...ungalukku mattum eppadi ippadi thonudhunnu enakku puriyave maatengudhu :)
//@பிரேம்குமார் : படத்தில் இருக்கு பாருங்க.. இந்த கவிதையை எழுதினதும் அதுதான்.. //
அந்த பூனை தானா? ரைட் விடு, அத கவனிச்சுக்குறேன்
உங்கள் வித்தியாசமான கற்பனையில்
மற்றுமொரு வித்தியாச கவிதை..
கவிதை நல்லாயிருக்கு.
ஒரு சின்ன வேண்டுகோள்.
மற்றகவிதைகளின் தொடர்சி போல்
வார்த்தைகள் கோர்ப்பதை சற்று வேறுபடுத்தல் இன்னும் ஆரோக்கியமானதாக இருக்குமென நினைக்கின்றைன்.
நீங்க எழுதியிருக்கறது எனக்கு புரியுதா புரியலையான்னு எனக்கே புரியலை சரவணா...ஆனா ஒரு மாதிரி அழுத்தமா...ஜிம்முக்கு போயி என்பது கிலோ வெயிட்டை ஒரு கைல தூக்குன மாதிரி வெயிட்டா இருக்கு....
கவிதைன்னா காதலிக்கு எழுதணும்...இல்லாட்டி இயற்கையை பத்தி எழுதணும்...எப்படி எழுதுனாலும் அடுக்கு மொழில, எதுகை மோனையோட ரைமிங்கா இருக்கணும்...இலக்கியத்திற்கு வகுக்கும் மொக்கை இலக்கணங்களை தூக்கி எறிவதற்காகவே உங்களை எனக்கு பிடித்திருக்கிறது...
நீங்கள் வேறு வெளிக்கு நகர்வது தெளிவாக தெரிகிறது...வாழ்த்துக்கள் நண்பா!
முன்பு ஒரு பின்னூட்டத்தில் நான் அரசியல் குறித்து எழுதுவதும், என் சமீபத்திய பதிவுகள் வெறும் எதிர் வினைகளாக இருப்பது குறித்தும் உங்களுக்கு கோபம் என்று எழுதியிருந்தீர்கள்...
உண்மை நண்பா...ஒத்துக் கொள்கிறேன்..சமீபத்திய இரண்டு பதிவுகளிலும் எனக்கும் ஒப்புதல் இல்லை...நான் எழுத விரும்புவது இது அல்ல...ஆனால் அழுத்தப்பட்ட பலூனிலிருந்து வெறும் வெப்பக் காற்று தான் வரும்...
kalakkals Saravanakumar:))
puthusu puthusa .......elutha attempt panreenga, super!
Wow !!
Very Nice different attempt Saravanan :)
the drawing is very nice.
and very different things in tamil.
keep it up.
with love
jagadeeswaran.
http://jackpoem.blogspot.com/
i try to find that animal.
don`t worry
with love,
jagadeeswaran.
http://jackpoem.blogspot.com/
ம்ம்ம் good attempt!!!
anbudan aruNaa
அருமை :-) சரவணா
நம்ம கடைப்பக்கம் ஆளே காணோம்
நீங்கள் பழைய சரவணனாக எப்போது மாற போகிறீர்கள்?????
நட்புடன்,
ரவிஷ்னா
நல்லாருக்குங்க,
ஸ்ரீமதியின் பிற்சேர்க்கையும் சிறப்பாக இருக்கிறது
அட இன்னும் இன்னும் அசத்துரீங்க சரவணன்,...ம்ம்ம்...ஒரு லெவலுக்கு போய்டீங்க போங்க...ரொம்ப வித்தியாசமான சிந்தனை :)
//பதினெட்டாவதுக் குப்பிக் கவிதையை
செலுத்துகையில்
கண்ணிமைக்கும் கணத்தில்
என்னையும்
மிச்சமிருந்த கவிதைக்குப்பிகளையும்
எடுத்து விழுங்கிவிட்டு
நெட்டி முறித்து
பறந்தது.. //
:)))
[ இப்படித்தான் சிரித்து சமாளிக்க வேண்டி இருக்கு சரவணா..:))) அர்த்தம் தான் என்னவென்று புரிந்து கொள்ள முயன்றுகொண்டு இருக்கிறேன்..! :)) ]
@Divyapriya : எனக்கும் அதாங்க தெரியல.. ஏன் இந்த மாதிரி எல்லாம் தோணுது!! :(
@பிரேம்குமார் : நன்றிங்க்னா.. :)
@ஆ.முத்துராமலிங்கம் : நான் என்ன பண்ணுவேன்.. முன்னாடியெல்லாம் ஒரே காதல் தோல்வி கவிதைகளா இருந்தது.. இப்போ அதெல்லாம் வேணாம் என்று நினைத்தால், இப்படியான கவிதைகள் வந்து சேருது.. பார்க்கலாம்.. என்ன ஆகுதுன்னு..
@அது சரி : //கவிதைன்னா காதலிக்கு எழுதணும்...இல்லாட்டி இயற்கையை பத்தி எழுதணும்...எப்படி எழுதுனாலும் அடுக்கு மொழில, எதுகை மோனையோட ரைமிங்கா இருக்கணும்...இலக்கியத்திற்கு வகுக்கும் மொக்கை இலக்கணங்களை தூக்கி எறிவதற்காகவே உங்களை எனக்கு பிடித்திருக்கிறது...//
நானும் முன்னாடி அப்படித்தானே எழுதிட்டு இருந்தேன்.. ;) ஆனால் அந்த காதல் தோல்வி கவிதைகளில் ஒரு சுதந்திரம் இருந்ததாகவும், அதை வேண்டாம் என்பதற்காகவே, இதை ஒரு சப்பைகட்டு போல் எழுதுவதாகவும் எனக்கு ஒரு ஐயமுண்டு.. பார்க்கலாம்..
//முன்பு ஒரு பின்னூட்டத்தில் நான் அரசியல் குறித்து எழுதுவதும், என் சமீபத்திய பதிவுகள் வெறும் எதிர் வினைகளாக இருப்பது குறித்தும் உங்களுக்கு கோபம் என்று எழுதியிருந்தீர்கள்...
உண்மை நண்பா...ஒத்துக் கொள்கிறேன்..சமீபத்திய இரண்டு பதிவுகளிலும் எனக்கும் ஒப்புதல் இல்லை...நான் எழுத விரும்புவது இது அல்ல...ஆனால் அழுத்தப்பட்ட பலூனிலிருந்து வெறும் வெப்பக் காற்று தான் வரும்...//
நீங்கள் அரசியல் எழுதனும்.. என்னை மாதிரி அரசியலை விமர்சிக்க தைரியம் இல்லாதவர்களுக்கு, உங்கள் பதிவு, என் மனக்குமுறலாக இருக்கும்.. ஆனால் வெறும் எதிர்வினைகள் மட்டும் வேண்டாம் என்கிறேன்.. உங்களிடம் நல்ல எழுத்து இருக்கிறது.. அதையும் எழுதுங்கள் என்கிறேன்..
@Divya : நன்றிங்க திவ்யா. உங்கள் தொடர் ஆதரவுக்கு..
@Ramya Ramani : ரொம்ப நாட்களுக்கு பின் வந்து இருக்கீங்க!! நன்றி..
@ஜகதீஸ்வரன் : நன்றிங்க உங்கள் முதல் வருகைக்கு..
@அன்புடன் அருணா : நன்றி அக்கா..
@Suresh : நன்றி நண்பரே.. கொஞ்சம் ஆணி அதிகம்..அதான் வரல.. நிச்சயம் வரேங்க.. ஆனால் உங்கள் பதிவுகளை படிக்கிறேன்..
@Ravishna : தெரியலையே ரவிஷ்னா.. மாற வேண்டாம் என்பது என் அவா..
@இப்னு ஹம்துன் : நன்றிங்க இப்னு.
@ஸாவரியா : நன்றி தோழி.. நான் இங்கேயே தான் இருக்கேன்.. :)
@நவீன் ப்ரகாஷ் : நன்றிங்க நவீன்..
கவிதயில் நீ உருவாக்கும் களமும், அங்கு நிகழ்த்தும் செயல்களும் பிரமிப்பூட்டுகின்றன..
விளிம்பில் நிற்கிறேன், விளக்கம் தேவை.!
Post a Comment