வீண் விரயங்கள்...
இன்று மாலை
வழக்கத்தை விட
அதிகமாகவே கோபித்து சண்டையிட்டான்..
அவன் இன்னும்
அதை மறக்கவில்லையென்றும்
நான் செய்தது பெரும் துரோகமென்றும்
வாதிட்டான்..
சில பொய்களை சொல்லி
அதிகமாகவே சரக்கு வாங்கி கொடுத்து
ஒருவாறாக சமாளித்து
அவனையும் அழைத்துக்கொண்டு
நடு இரவில்
வீடு திரும்புகையில்
யாருமில்லா சுரங்கப்பாதையில்
அவன் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்தேன்..
கடந்த முறை
அவன் சண்டையிட்டபோதே
கொன்றிருந்தால்
சில பொய்களையும்
சரக்கிற்கான காசையும் தவிர்த்திருக்கலாம்
என்றெண்ணியபடியே வீட்டுக்கு ரயிலேறினேன்..
27.03.2008


me the first.. :)
ஏங்க இந்த கொலைவெறி?
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
கதையை மேலும் தொடர்ந்திருக்கலாமே.... சீகிரமாகவே முடித்து விட்டீர்கள்....
நட்புடன்,
ரவிஷ்னா
//யாருமில்லா சுரங்கப்பாதையில்
அவன் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்தேன்..//
இவ்வரிகள் உண்மையோ என என்ன தோன்றுகின்றது. உங்கள் கவிதையில் எப்போதும் ஒரு அழகான் புனைவு இருக்கும் இதில் அது சற்று missing
னு நினைக்கிறேன்.
இருந்தாலும் படிக்க நால்லாதன் இருக்கு
ம்ம்ம்...எனக்குப் பிடிக்கவில்லைப்பா...ம்ம்ம் அல்லது புரியவில்லையோ????என்னாச்சு சரவணா????
சரவணா உங்க கவிதையோட மறைபொருளை உடைக்கப்போறேன், அல்லது வாசக வாத்தியங்களில் இது என்னோட ஒரு கோணமாகபும் இருக்கலாம்,
மனசாட்சிய தான கொன்னீங்க, அது ஜீசஸ் மாதிரி 3 வது நாளே உயிர்த்தெழுந்து சரக்கு வாங்கி குடுக்கச்சொல்லி கேட்டிருக்குமே,
நல்லா இருக்குங்க உங்க கவிதை
வர வர பயமுறுத்தற மச்சி...
:)
Why this Murder Rage?
சரவணா, நிஜத்தில் தான் எங்கும் அமைதியில்லை. மக்கள் எல்லாம் பொறுமையில்லாமல் இருக்கிறார்கள்
படைப்பிலிக்கிலயமும் இப்படி கொடூரத்தையே மையப்படுத்தினால் எப்படி?
இந்த கவிதை மிகக்கொடுமையாக இருக்கிறது :(
யாத்ரா சொன்னது போல் இது ஒரு படிமமாக இருக்கலாம், அது எனக்கு புரியாமல் போயிருக்கலாம்.
ஆனால் கவிதையின் மீதான் முதல் பார்வை சற்று பயமுறுத்தவே செய்தது
@நாணல் : நீங்கதாங்க முதலாவது.. ச்சும்மா ஒரு கொலைவெறி..
@உலவு.காம் (ulavu.com) : பார்க்கிறேங்க..
@Ravishna : நன்றி நண்பா..
@ஆ.முத்துராமலிங்கம் : வேற மாதிரியும் எழுதி பார்க்கலாமே என்று ஒரு சிறு முயற்சி..
@அன்புடன் அருணா : ஒவ்வொரு மாதிரியும் எழுதி பார்க்கிறேனே.. ப்ளீஸ்...
@yathra : நீங்க ரொம்ப நல்லவரு..!!
@தமிழன்-கறுப்பி... : நண்பா.. உங்களை நான் பயமுறுத்துவதா..!!
@பிரேம்குமார் : [குரூர அழகியல் ;)].. ச்சும்மாதானுங்க்னா.. எப்படியெல்லாம் என்னால் எழுத முடிகிறது என்று பரிசோதனை.. அவ்ளோதான்..
//
யாருமில்லா சுரங்கப்பாதையில்
அவன் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்தேன்..
//
யப்பா சரவணா...நானெல்லாம் அப்பாவி புள்ள...அப்பப்ப வந்து உன் பதிவுல கும்மி அடிக்கிறது தான்...அதுல கோவம் ஏதும் இல்லியே?? இருந்தா சொல்லு பேசி தீர்த்துக்கலாம்...
இனிமே யாரு தண்ணி வாங்கி குடுத்தாலும் குடிக்க முடியாது போலருக்கே...நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!!
எப்பவோ ஸ்கூல்ல படிச்ச Poison Tree...அப்படிங்கிற கவிதையை ஞாபகப்படுத்துது....
சீரியஸா சொன்னா, கவிதை நல்லாருக்கு...கூச்சலிடும் மனதை குவாட்டர் ஊற்றி கொலை செய்வது உண்டு....
வித்தியாசமான முயற்சி சரவணகுமார்...ஆனா ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் இந்த கவிதைல, என்னன்னு சொல்ல தெரில.....ஒருவேளை பயங்கரமான வரிகள் என்பதால் எனக்கு அப்படி தோனுதுன்னு நினைக்கிறேன்.
பல கோணங்களில் கவிதை படைக்க விரும்பும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!
@அது சரி : நீங்க இப்போ அரசியல் எழுதுவதில் எனக்கு கோபம்.. (உங்களிடமிருந்து எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.. எதிர்வினைகளை மட்டுமல்ல..)
Poison Tree கவிதை நண்பர் செல்வ கருப்பையா மூலம் அறிமுகம் எனக்கு.. ஞாபகபடுத்தியதற்கு நன்றிங்க்னா..
@Divya : ஏதோ மிஸ்ஸிங்கா.. கவனத்தில் கொள்கிறேன்.. நன்றி தோழி..
ஒரு திரில்லர் ஸ்டோரி படிச்ச மாதிரி இருக்கு
கவிதை...வித்தியாசமான முயற்சி...
ஒரு கொலையைக் கூட கவிதையின் அழகில் எடுத்துக் கூற இயலுமா?
பெரும் வியப்பில் ஆழ்த்தியது உங்கள் கவிதை.
அன்புடன்,
ஜகதீஸ்வரன்.
http://jackpoem.blogspot.com/
நல்லா இருக்கு :))
கவிதை நன்று.. வாழ்த்துகள்,, இனி வீண் விரயங்கள் வேண்டாமே..
kavithai nalla iruku but enaku than puriyala pa
எனது எதிரியின் மனநிலையிலிருந்து எழுதியிருக்கிறீர்களெனத் தோன்றுகிறது :)
துரோகத்தைத் தந்துசெல்வதைவிட கொன்றுவிடுவதே மேல்..
வலிகள் தெரிவதில்லை !
யப்பா, உங்க கூட சண்டை போடக் கூடாது போலிருக்கே :-)
வழக்கம் போல அட்டகாசம். மனசாட்சிதானா.? என்னால் உங்கள் ட்ரேட்மார்க் அன்பையும் பொருத்திப்பார்க்கமுடிகிறது.
@புதியவன் : நன்றிங்க புதியவன்..
@ஜகதீஸ்வரன் : நன்றிங்க முதல் வருகைக்கு..
@ஸ்ரீமதி : அப்படியா ;)
@ரகசிய சிநேகிதி : நன்றி தோழி.
@gayathri : யாத்ரா, ரிஷான் மற்றும் ஆதி அண்ணாவின் பின்னூட்டங்களை படிக்கவும்.. நன்றி காயூ..
@எம்.ரிஷான் ஷெரீப் : அப்படியும்தான்.. நன்றி ரிஷான்..
@விஜய் : ஹி ஹி.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..!!
@ஆதிமூலகிருஷ்ணன் : [அன்பைத்தான் அப்பவே தொலைத்தாயிற்றே.. ;)]
அட.. அன்பு, இது மூன்றாவது சாத்தியமாக இருக்கிறது..!!
கொஞ்சம் லேட். போலிஸ் மாதிரி கொலை நடந்து ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.
கவிதை சூப்பர்ப்பா இருக்குங்க..!
romba lateaa vandhutten….aanaa yen eppa paarum yaaraiyaavadhu kolai pannitte irukkeenga? Pirandha naal vera vara pogudhu…oru sandhoshamaana padhivaa podunga :)
@Karthik : நன்றி கார்த்திக்.. எப்போவேண்டுமானாலும் வரலாம்..
//போலிஸ் மாதிரி கொலை நடந்து ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.//
மிக மிக ரசித்தேன்.. :)
@Divyapriya : நமக்கு பிறந்தநாளுன்னு சொல்லுங்க.. :) எப்போவேண்டுமானாலும் வரலாம்..
உயிர் போக செய்வது மட்டும் கொலையல்ல.. (fyi.. ignorance கூட கொலைதான்..)
அன்பு சரவணன்,
கடும் பணி நிமித்தமாகவும்,..மற்றும் தீவிர சுகமின்மையாலும் உங்கள் தளத்திற்கு வந்து COMMENTட்ட முடியவில்லை :(((
அழகழாகான கவிதைகள்....நல்ல கருத்தாழமிக்கவைகள். மிக அருமை. நிரம்ப ஆச்சரியத்துடன் உங்கள் எழுத்துக்களை வாசிக்கிறேன். சிலவை என் மனத்திற்கு ஒப்பாதவையாய் இருந்தாலும் உங்கள் பரிட்சித்துப் பார்க்கும் முயற்ச்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. என்னவோ தெரியவில்லை,..எனக்கு மிக கடுமையான கோபம்/வருத்தம் தரக்கூடிய விஷயங்களை தந்தவர்களைக் கூட நான் அன்பு செய்வதால் (இதனால் என் நண்பர்களுக்கும் எனக்கும் நிறைய பிணக்கம் வருவதுண்டு. "சொரணையில்லாதவள் என்ற பெயர் கூட எனக்கு உண்டு) எனக்கு உங்களது "வீண் விரயங்கள்" சற்று தீவிரமாய் மனதில் பட்டது. அந்த ரயில் கவிதை ரொம்ப அழகு...சின்ன வயதில் ஒருவர் பின் ஒருவராய் நின்று ரயில் ஓட்டிய நினைவுகள் அலை மோதியது. அந்த பூனை ஒரு "Thriller சினிமா"வுக்குரிய கதைக் கரு அதில் இருந்தது. இன்னும் இன்னும் எழுதுங்கள்.
உங்கள் அன்புச்சினேகிதி
ஸாவரியா
nalla irukku rasiththeen
mankuthiray
Post a Comment