Monday, March 23, 2009

ரயில் செய்யும் இயந்திரவியல்..


ரயிலொன்றினை வடிவமைக்கும்
இயந்திரவியல் நுட்பம்
தெரியுமெனக்கு.
ரயில் செய்யும் இயந்திரங்கள்தான் இல்லை.
என்றாலும்
வார்த்தைகளால்
ரயில் செய்யமுடியுமென்ற
நம்பிக்கைமட்டும் இருந்தது.
பலவாறாக முயன்று
வார்த்தைகளான ரயிலொன்றினை
செய்துமுடித்தேன்.
பின்பு
தண்டவாளமும்
சில ரயில் நிலையங்களும் இருக்கும்
இக்கவிதையை தேர்ந்தெடுத்து
வார்த்தைகளாலான ரயிலை ஓட்டி
பரிசோதிக்கிறேன்..
நீங்கள் இப்போது
இந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்..

21.03.2009

36 Comments:

புதியவன் said...

//வார்த்தைகளால்
ரயில் செய்யமுடியுமென்ற
நம்பிக்கைமட்டும் இருந்தது.//

வார்த்தைகளில் நீங்கள் செய்த ரயில் பயணம் அருமை...

அன்புடன் அருணா said...

வாவ்....ரயில் பயணங்களில்....இது மிக அழகான ரயில் பயணம்.
அன்புடன் அருணா

gayathri said...

பலவாறாக முயன்று
வார்த்தைகளான ரயிலொன்றினை
செய்துமுடித்தேன்.

mmmmm ரயில் nalla than iruku

ஆ.முத்துராமலிங்கம் said...

வரிகளை தேர்வு செய்யமுடியவில்லை
அத்தனை வரிகளும் அட்டகாசம்
கவிதை அருமையாக உள்ளது
வித்தியாசமான சிந்தனை

நாணல் said...

புதுசா இருக்கே இந்த ரயில் .. :)

Ravishna said...

அன்புள்ள சரவணனுக்கு,

மன்னித்துக்கொள்ளவும்....
முன்பு இருந்ததை போன்று, இப்பொழுதெல்லாம் உங்கள்
கவிதையில் நயம் இல்லை....

படிக்கும் பொது எதோ கதை போன்று தான் வருகிறது....

காத்திருக்கிறேன்.... மீண்டும் பழைய சுவை உங்கள் கவிதையில் வரும் என்று...

என்று அது நடக்கும்????
இது என்னுடைய கருத்து... பிழை இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்...

நட்புடன்,
ரவிஷ்னா

Karthik said...

:))

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான கவிதை.. எப்படி இவ்வளவு வித்தியாசமான தளங்களிலெல்லாம் சிந்திக்கிறீர்களென ஆச்சரியமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

reena said...

அழகான கவிதைங்க... வாழ்த்துக்கள். வித்தியாசமான சிந்தனை தளம்.

reena said...

ரயில்ல ஃபேன் சரியா ஓடலீங்க... TTRRR..........

ஸ்ரீமதி said...

:)))

Saravana Kumar MSK said...

@புதியவன் : நன்றிங்க புதியவன்.. இப்பல்லாம் முதல் ஆளா வந்து ஆதரவு தரீங்க..

@அன்புடன் அருணா : நன்றிங்க அக்கா..

@gayathri : நன்றி காயூ..

@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க முத்துராமலிங்கம்..

@நாணல் : புதுசு கண்ணா புதுசு..

@Ravishna : வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி ரவிஷ்னா.. என்னால் முடியும் மட்டும் முயற்சிக்கிறேன்.. :)

@Karthik : இன்னாப்பா அர்த்தம் இந்த ஸ்மைலிக்கு..!!

@எம்.ரிஷான் ஷெரீப் : நன்றிங்க ரிஷான்..

@reena : நன்றிங்க.. வார்த்தைகளான ஒரு ஃபேன் செய்து மாட்டிவிடுகிறேன்..

@ஸ்ரீமதி : ஸ்ரீ, இப்படி ஒண்ணுமே சொல்லாம போனா என்ன அர்த்தம்..!!

Ravishna said...

நான் உங்கள் மனதை காயப்படுத்தும் நோக்கோடு சொல்லவில்லை....
மனதில் பட்டதை சொன்னேன்..
இது என்னுடைய பழக்கம்.

நட்புடன்,
ரவிஷ்னா

yathra said...

ஆமாங்க, எதிர்ல ஒருத்தர் பாக்கறாங்க. மௌனப்பறிமாறல்கள், எதையும் பேசிக்கவேயில்ல, சாளர ஓரம் நல்லா காத்து அடிக்குது,

என் நிறுத்தத்தில் இறங்குவதற்கும் மறந்து ஒரே மௌனப்பறிமாறல்கள் தான்

அது சரி said...

//
நீங்கள் இப்போது
இந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்..

//

பயணம் நல்லாருந்துச்சி!!

ஸ்ரீமதி said...

// ஸ்ரீ, இப்படி ஒண்ணுமே சொல்லாம போனா என்ன அர்த்தம்..!!//

என்ன சொல்றதுன்னு தெரியலன்னு அர்த்தம்... இப்பொழுதெல்லாம் உங்கள் கவிதைகள் காதலில் இருந்து விலகி இருந்தாலும் ஏதோ ஒன்று குறைக்கிறது... மனதில் ஒட்ட மறுக்கிறது.. வலியான வார்த்தைகள் இல்லை.. நன்று... ஆனாலும், என்னவோ என்னன்னு தெரியல உன் ஸ்டைல் இல்ல இது... கொஞ்சம் பாரேன்... ஆனா, இதுதான் உன் விருப்பம் அல்லது இது தான் நீ அடைய நினைக்கிற அடுத்த படின்னா நான் சொன்ன இந்த கருத்த மறந்துடு.. இல்லை இது, தானா மாறின நடை அப்படின்னா, மாற ட்ரை பண்ணு... நான் சொல்றது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.. நன்றி :))

ஸ்ரீமதி said...

அச்சச்சோ சாரி.. இதே தான் ரவிஷ்னாவும் சொல்லிருக்கார்.. :((

Karthik said...

//@Karthik : இன்னாப்பா அர்த்தம் இந்த ஸ்மைலிக்கு..!!

கவிதை ரொம்பவும் புத்திசாலித்தனமா இருக்கு. அந்த அளவுக்கு புத்திசாலித்தனமா எதுவும் சொல்லத் தெரியலை. அதான் அந்த ஸ்மைலிக்கு அர்த்தம்.
:))

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

Suresh said...

//வார்த்தைகளால்
ரயில் செய்யமுடியுமென்ற
நம்பிக்கைமட்டும் இருந்தது./

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

Saravana Kumar MSK said...

@Ravishna : அப்படியெல்லாம் எடுத்துக்காதீங்க ரவிஷ்னா.. உண்மையான கருத்துக்கள் எனக்கு முக்கியம்..

@yathra : நன்றிங்க.. என் பரிசோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றிங்க..

@அது சரி : வாங்கண்ணா.. நன்றிங்க்னா..

@ஸ்ரீமதி : இதை நான் கேட்காமலேயே நீ சொல்லலாம்லை.. இப்போவாச்சும் சொன்னியே.. இனிமே என்ன தோணுதோ சொல்லு..
உன் கருத்துக்கு நான் என்ன சொல்லனும்ன்னு நினைக்கிறேன்னா, இப்போது எழுதும் எதுவும், நான் சந்தர்ப்பத்தில் எழுதறவனா.. இல்லை உண்மையிலே என்கிட்ட எழுதுவதற்கு எதாச்சும் இருக்கான்னு சோதித்து பார்க்கும் ஒரு சோதனை ஓட்டம்.. எழுத பழகுறேன்.. :)

@Karthik : கார்த்திக், நீ ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சிட்ட.. :)

@Suresh : நன்றிங்க.. உங்களின் பதிவை படித்தேன்.. அடுத்த பதிவை போடுங்க..

பேரின்பா said...

உங்கள் கவிதைகளில் நேரடி உணர்வை அணுக
முடிகிறது... வாழ்த்துகள்.

Karthik said...

//@Karthik : கார்த்திக், நீ ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சிட்ட.. :)

Oops, சத்தியமா எனக்கு புரியலை!

Divyapriya said...

நல்லா தான் ரயிலு விட்ருக்கீங்க :)

பிரேம்குமார் said...

ஆகா சரவணா! வித்தியாசமா அழகா இருக்கு இந்த கவிதை பத்தின கவிதை :)

ஜி said...

அட.. முதல் தடவையே புரிஞ்சிடிச்சு :))

ரயில் பயணம் எப்போதுமே அருமையாத்தான் இருக்கும்... தடங்களிலும்... கவிதையிலும்... :))

ரகசிய சிநேகிதி said...

படித்தவுடன் சிறு புன்னகை தோன்றியது.. நன்று..
இந்த கவிதையை மேலும் விரிவுப்படுத்தி இருக்கலாம் சரவணாக் குமார். வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துகள் ..
தொடரட்டும் வார்த்தைகளாலான இந்த கவிதை நாங்கள் உங்களுடன் என்றும் பயணிக்க... :-)

பிரேம்குமார் said...

//அட.. முதல் தடவையே புரிஞ்சிடிச்சு :))//

அதானே... ;)

கவிநயா said...

//எப்படி இவ்வளவு வித்தியாசமான தளங்களிலெல்லாம் சிந்திக்கிறீர்களென ஆச்சரியமாக இருக்கிறது. பாராட்டுக்கள்//

வழிமொழிகிறேன் :)

Saravana Kumar MSK said...

@பேரின்பா : நன்றிங்க..

@Karthik : உன் தளத்தில் போட வேண்டிய பின்னூட்டம்.. நேரமின்மை காரணமாக இங்கேயே சொல்கிறேன்..

@Divyapriya : நன்றிங்க.

@பிரேம்குமார் : நன்றிங்க்னா.. ரொம்ப நாளா உங்கள ஆளையே காணோம் இந்த பக்கம்..

@ஜி : ஹி ஹி. நன்றி..

@ரகசிய சிநேகிதி : நன்றிங்க சிநேகிதி..

@கவிநயா : நன்றிங்க..

பேரின்பா said...

ஒரு உதவி... உங்கள் தளத்திலோ அல்லது உங்கள் நன்பர்கள் தளத்திலோ, எழுதுவது பற்றி
("எழுத்து என்பது எழுதிக்கொண்டே இருப்பது...........கிழித்தெறிந்து விட்டு மறுபடியும் எழுத ஆரம்பிப்பது" )என்பது போன்ற வாக்கியத்தை பார்த்தேன். அதை அன்று தவற விட்டுவிட்டு இன்று தேடி அல்லாடுகிறேன். தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. தங்களுக்கு அது எங்கிருக்கிறது என்று தெரிந்தால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்த வேன்டுகிறேன்.
புண்ணியமா போகும்.

பேரின்பா said...

ஒரு உதவி... உங்கள் தளத்திலோ அல்லது உங்கள் நண்பர்கள் தளத்திலோ, எழுதுவது பற்றி
("எழுத்து என்பது எழுதிக்கொண்டே இருப்பது...........கிழித்தெறிந்து விட்டு மறுபடியும் எழுத ஆரம்பிப்பது" )என்பது போன்ற வாக்கியத்தை பார்த்தேன். அதை அன்று தவற விட்டுவிட்டு இன்று தேடி அல்லாடுகிறேன். தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. தங்களுக்கு அது எங்கிருக்கிறது என்று தெரிந்தால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
புண்ணியமா போகும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கடைசி விநாடிகளில் ரயிலைத்தவறவிட்டுவிட்டேன் சரவணா.. மெயிலுக்கு வரவும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்புறம் ஒரு வேண்டுகோள் : சைட்ல இருக்குற லிங்க்குல என் பேர மாத்திடலாமே..

மண்குதிரை said...

excellent

Saravana Kumar MSK said...

@பேரின்பா : நானும் இப்ப கொஞ்ச நாளா பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை.. யார் தளத்திலாவது படித்தால் நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..

@ஆதிமூலகிருஷ்ணன் : உங்க பேர மாத்திட்டேன்.. உங்களுக்கு madal anuppugiren..

@மண்குதிரை : நன்றிங்க..

  ©Template by Dicas Blogger.

TOPO