Monday, March 16, 2009

பூனையாகுதல்...


அவன் போய்விட்டபின்பு
சுற்றும் முற்றும்
யாரும் இல்லையென்பதையும் உறுதிபடுத்திவிட்டு
அவன் எழுதிய கவிதைக்குள்
எட்டிப்பார்த்தேன்..
அது ஒரு காதல் கவிதை..
வழக்கமான
சில மரங்களும்
அவற்றின் பூக்களும்
பறவைகளும்
பச்சைப் புல்வெளிகளும்
தூரத்தில் ஒரு பெரிய கடலும் கொண்டிருந்த
அக்கவிதையில்
கூடவே சில "அன்பே", "அழகே"
வார்த்தைகளுக்கு மத்தியில்
அவன் காதலி தனியாய் அமர்ந்திருந்தாள்..
நான்
அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..

13.03.2009

30 Comments:

புதியவன் said...

ஒவ்வொரு கவிதையிலும் வித்தியாசம் காணமுடிகிறது...கவிதை நல்லா இருக்கு சரவணா...

gayathri said...

nalla iruku sarana kavithai

நட்புடன் ஜமால் said...

\\அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..\\

நல்ல இருக்கு சரவணா!

ஆண்ட்ரு சுபாசு said...

கவிதையை எழுவது வேறு,பயணிப்பது வேறு ..நீங்கள் பயணம் செய்து உள்ளீர்கள் ...நீங்கள் எழுதியது வார்த்தைகள் போல அல்ல ..பயணக்குறிப்பு போல உள்ளது ...இந்த முடிவை ஆரம்பமாய் கொண்டு அடுத்த கவிதை பயணத்தை செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

ஸ்ரீமதி said...

அடப்பாவி :))

Karthik said...

பின்றீங்கபா..! :)

yathra said...

என்னா ஒரு வில்லத்தனம், இந்த கவிதையை படித்து விட்டதால், விஷயம் அவளுக்கு தெரிந்து அவனையே அவன்தானா என வேறு மனிதனைப் பார்ப்பது போல் பார்க்கச் செய்து விட்டீர்கள், இப்ப ரொம்ப சந்தோஷம் தானே

அன்புடன் அருணா said...

நானும் ஸ்ரீமதி போல அடப்பாவிதான்... :))
அன்புடன் அருணா

ஷீ-நிசி said...

ரொம்ப நல்லாருக்கு நண்பா!

வாழ்த்துக்கள்!

கவிநயா said...

பொருத்தமான தலைப்பு :)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

வழக்கம் போல பிரமிப்பைத்தரும் கவிதை வரிகள்.. சூழல்.. (எனக்கு இன்னும் விளக்கம் தேவைப்படுகிறது சரவணா.. பரவாயில்லை என விடமுடியவில்லை..)

நாணல் said...

அடப்பாவமே...

Divyapriya said...

வித்யாசமான கவிதை, வித்யாசமான தலைப்பு, படம்...எல்லாமே ஒரே வித்யாசமான தான் சரவணா :)

Saravana Kumar MSK said...

@புதியவன் : நன்றிங்க்னா உங்க தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும்..

@gayathri : நன்றி காயூ..

@நட்புடன் ஜமால் : நன்றிங்க்னா..

@ஆண்ட்ரு சுபாசு : நன்றிங்க ஆண்ட்ரு.. முயற்சிக்கிறேன்.. :)

@ஸ்ரீமதி : ம்ஹும்.. நான் அப்பாவி.. (உனக்குத்தான் தெரியுமே )

@Karthik : நன்றிப்பா..

@yathra : ஹி ஹி ஹி.. ஏதோ என்னால முடிஞ்சது..

@அன்புடன் அருணா : இல்லையக்கா.. நான் ஒரு அப்பாவி.. :)

@ஷீ-நிசி : நன்றி நண்பா.. :)

@கவிநயா : நன்றிங்க கவிநயா..

@தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் : நன்றிங்க்னா.. மடல் அனுப்புகிறேன்.. :)

@நாணல் : அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..

@Divyapriya : வித்தியாசமா எப்படி நன்றி சொல்வது!! :)

இராம்/Raam said...

அருமை..... :)

அது சரி said...

//
அவன் காதலி தனியாய் அமர்ந்திருந்தாள்..
நான்
அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..
//

என்னா வில்லத்தனம்....இப்ப தான மேட்டரு வெளிய வருது!

அது சரி said...

வழக்கம் போல....கவிதை கலக்கல்!!

ஆ.முத்துராமலிங்கம் said...

அறுமையான கவிதை
மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்

இனியவள் புனிதா said...

:D

Saravana Kumar MSK said...

@இராம்/Raam : நன்றிங்க்னா.. :)

@அது சரி : நான் ரொம்ப நல்லவன்.. ;)

@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க..

@இனியவள் புனிதா : வாங்க புனிதா..

Aravindan said...

சரவணா,

அடுத்த கட்டத்தை நோக்கி பிரமாதமாக முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் :)

புது டெம்பலேட் அழகு.

தமிழன்-கறுப்பி... said...

ஆரம்பிச்சிட்டான்யா...
யோவ் எத்தனை பேருய்யா பூனையை வச்சு 'பிலிம்' காட்டுவிங்க என்னைப்பொறுத்தவரையில் நான் பாம்புகளாகி விடுவதென முடிவெடுத்திருக்கிறேன்... :)

தமிழன்-கறுப்பி... said...

இதுல ஒரு சுகமும், குரூரமும் கலந்தே இருக்குமே...?

தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும் நடக்கட்டும்... :)

தமிழன்-கறுப்பி... said...

ok- 25th

logu.. said...

Ithu unga old postapola
illai..

eannamo missing..

Saravana Kumar MSK said...

@Aravindan : நன்றி நண்பா..

@தமிழன்-கறுப்பி... : சரி பாம்பு நண்பா.. அடுத்தவன் காதலியை கவர்வதும் ஒரு சுகமே.. ஹி.. ஹி..
நன்றிங்க..

@logu.. : நன்றி லோகு..

அய்யனார் said...

எந்த குற்றவுணர்வுமில்லாம புனித பிம்பங்களை உடைக்கிறதுல இது முக்கியமானது.நம்ம சுத்தி நடக்குர மிகப்பெரிய வன்முறைகள்ள ஒண்ணுதான் நீங்க தொட்டிருக்கிறதுனாலும் அடப்பாவி தான் :)

Saravana Kumar MSK said...

@அய்யனார் : வாங்க தல.. வேண்டுமானால், "வளர்ந்து வரும் அடப்பாவி" என்று வைத்துக்கொள்ளலாம்.. ;)

எம்.ரிஷான் ஷெரீப் said...

எனது தற்போதைய மனநிலையோடு கவிதை முழுதாகப் பொருந்திப் போகிறது. பூனையாகுதலை உணரமுடிகிறது .

  ©Template by Dicas Blogger.

TOPO