Tuesday, March 3, 2009

காத்திருப்புகள்..


உன்
நேசங்களுக்கான
என் காத்திருப்புகளை
சுடும் பாலை மணலில்
இரைக்காக
ஒளிந்து கிடக்கும் விஷப்பாம்பின்
காத்திருப்புகளாகக் கருதாதே..
அது
துளி மழைக்காக
காத்திருக்கும்
பாறையிடுக்குத் தேரையின்
காத்திருப்பையொத்தது..
என்றாலும்
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.

03.03.2009

33 Comments:

அன்புடன் அருணா said...

எப்பவும் போல வன்முறையில்லாமல் இருப்பது கொஞ்சம் அழகாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

புது template...புது விஷயங்கள் என இருந்தாலும்......அந்தப் பழைய வரிகள் எனக்குரிய வானம் something like that.....எனக்கு ரொம்பப் பிடிக்கும்....அதை எடுத்துவிட்டது எனக்கு வருத்தம்தான்...
அன்புடன் அருணா

King... said...

அப்ப சரி...:)

தமிழன்-கறுப்பி... said...

அட, புது வடிவம்...!

தமிழன்-கறுப்பி... said...

அய்யனாரைப்போய் பெரிய பசங்க லிஸட்டுல சேத்திட்டியே நண்பா தல கோச்சுக்கப்போறாரு..

அய்யனாரைப்போய் பெரிய பசங்க லிஸ்ட்டுல சேத்திட்டியே நண்பா தல கோச்சுக்கப்போறாரு..:)

தலக்கு இப்பவும் வயசு இருபதுகளின் ஆரம்பத்தில் தான் இருக்கிறது இப்படித்தான் வலை முழுவதும் பரவ விட்டிருக்கிறோம் விரும்பினால் உரையாடலினியை கேட்டுப்பாருங்கள் அவருடைய உண்மை வயதை..

:)

தமிழன்-கறுப்பி... said...

\\
என்றாலும்
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு
\\

காத்திருக்கிறதுன்னு முடிவானதுக்கப்புறம் இதை சொல்லித்தானே ஆகணும்... :)

Divyapriya said...

கவிதைல வர உவமைகளெல்லாம் கலக்கல்...அதிலும் இந்த வரிகள் அருமை

//உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.//

Saravana Kumar MSK said...

@அன்புடன் அருணா : வாங்க அக்கா.. வன்முறைகளை எப்போதும் திணிப்பது கிடையாது.. அது நிகழ்ந்து விடுவது.
முன்னர் இருந்த அந்த வரிகள் கொஞ்சம் ஓவர் பில்ட் அப் என்று தோன்றியதால் தூக்கிவிட்டேன்.. :)

@King... : நன்றிங்க்னா.. அப்பப்போ இந்த பக்கமும் வருவதில் மகிழ்ச்சி.

@தமிழன்-கறுப்பி... : நன்றி நண்பா.. மேலும் அய்யனார் பெரிய பசங்க லிஸ்டில் இருக்கட்டும்.. ;)
காத்திருத்தல் ஒரு நரகம்.. காத்திருத்தலுக்கு இப்படி கவிதையெல்லாம் எழுதுதல் கொடுமை. :(

@Divyapriya : வாங்க திவ்யப்ரியா.. பகிர்வுக்கு நன்றி :)

அது சரி said...

//
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.
//

ஆஹா....கலக்கல்...

சரவணன், இதெல்லாம் தானா தோணுதா இல்ல ரூம் போட்டு யோசிக்கிறீங்களா?? பின்றீங்க!

அது சரி said...

இந்த புது டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு...

Divya said...

wow........new template supera irukku:))

Divya said...

\\/உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.//


இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு:))

புதியவன் said...

//உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு//

வரிகள் அருமை...

புதியவன் said...

//துளி மழைக்காக
காத்திருக்கும்
பாறையிடுக்குத் தேரையின்
காத்திருப்பையொத்தது..//

உவமை அழகு...

ஸ்ரீமதி said...

தளம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. :)))

ஸ்ரீமதி said...

//அது
துளி மழைக்காக
காத்திருக்கும்
பாறையிடுக்குத் தேரையின்
காத்திருப்பையொத்தது..//

அழகான உருவகம் :)))

//உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.//

கவிதை மிக நன்று :)))

ஸ்ரீமதி said...

//அன்புடன் அருணா said...
புது template...புது விஷயங்கள் என இருந்தாலும்......அந்தப் பழைய வரிகள் எனக்குரிய வானம் something like that.....எனக்கு ரொம்பப் பிடிக்கும்....அதை எடுத்துவிட்டது எனக்கு வருத்தம்தான்...
அன்புடன் அருணா//

Repeatuuuuuuuu....

ஷீ-நிசி said...

காதலிக்கு புரிந்திடுமோ? காதலனின் மனம்..

வரியமைப்புகள் பிரமாதம்.

வாழ்த்துக்கள்!

தாமிரா said...

இந்த‌ப்ப‌திவுக்கு ப‌தில் போட்டுட்டேனா? எப்பிடின்னாலும் பிர‌மாத‌ம்னுதான் போட‌ப்போறேன். போட்டா என்ன‌ போடாட்டி என்ன‌?

Saravana Kumar MSK said...

@அது சரி : வாங்கண்ணா.. கடைசி வரிகள் வெகு எதேச்சையாக உருவான ஒன்றுதான்.. கடைசி வரிக்கு பின் இந்த வரியையும் //ஒரு பூனையாக..// சேர்க்கலாம் என்று இருந்தேன்..
டெம்ப்ளேட் ரொம்ப நாளா மாற்றலாம் என்று நினைத்தேன்.. இப்போதுதான் எனக்கு பிடித்த மாதிரி ஒரு டெம்ப்ளேட் கிடைத்தது. மாற்றிவிட்டேன்..
நன்றி :)

@Divya : நன்றி திவ்யா பகிர்வுக்கும் வருகைக்கும். :)

@புதியவன்: நன்றிங்க புதியவன் தொடர் ஆதரவுக்கும் வருகைக்கும். :)

@ஸ்ரீமதி : நன்றி ஸ்ரீமதி பகிர்வுக்கும் வருகைக்கும். :)
profile-வரிகள் கொஞ்சம் ஓவரா தெரிந்தது. அதனால்தான் மாற்றினேன்..

@ஷீ-நிசி : நன்றிங்க ஷீ-நிசி பகிர்வுக்கும் வருகைக்கும். :)

@தாமிரா : நன்றிங்க்னா.. எப்போதும் வரணும்.. ஏதாவது சொல்லணும்.. :)

TKB காந்தி said...

//உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு//


என்ன சொல்லறதுன்னே தெரியலங்க :D

ஸாவரியா said...

LOVE IT!

JUST LOVE IT!

கார்க்கி said...

அருமை சகா..

எனக்கு இந்ந்தக் கவிதை அய்யனாரின்

குளத்தை மூட விரையும் ஆகாயத் தாமரையென..

என்ற கவிதையை நினைவுப்படுத்தியது..

ஞாபகமிருக்கா?

இனியவள் புனிதா said...

ரொம்ப நல்லா இருக்கு சரவணா..நான்கூட முகவரி தொலைத்துவிட்டேனோ என்று எண்ணிவிட்டேன்..பதிவின் மாற்றத்தைச் சொன்னேன்..ஆனாலும் அற்புதம் :-)

Saravana Kumar MSK said...

@TKB காந்தி : எதையாவது சொல்லுங்க பாஸு.. :)

@ஸாவரியா : நன்றி தோழி வருகைக்கும் பகிர்வுக்கும்..

@கார்க்கி : சரியா சொன்னீங்க சகா.. எழுதி முடித்தபின்தான் தெரிந்தது.. "மிகையென்றோ போலியென்றோ" இங்கு விஷபாம்பாகவும், "பற்றுதலுக்காக விரையும் ஆகாய தாமரையின் வேர்கள்" இங்கு தேரையாகவும் மாறி இருக்கிறது..

அதனால் தான்
//என்றாலும்
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.//
இதையும் சேர்த்து இன்னும் ஒரு தன்மையை சேர்க்க வேண்டி இருந்தது கவிதையில்.

@இனியவள் புனிதா : வாங்க புனிதா.. ரொம்ப நாளா உங்களை காணோம்!! நன்றிங்க பகிர்வுக்கும் வருகைக்கும்..

பிரேம்குமார் said...

நல்ல கவிதை சரவணா. டெம்ப்ளேட்டில் இன்னும் நிறைய வேலை மிச்சம் இருக்கோ?

gayathri said...

உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு

nalla irukupa intha lines

logu.. said...

Fentastic..

romba arumaiya irukkunga.

தமிழினி..... said...

சரவண குமார்,நல்லா இருக்கிங்களா?
வலைப்பூ ரொம்ப முன்னேறி இருக்கு...சந்தோஷம்....
வழக்கம் போல கவிதைகளும் பிரமாதம்.... :)

Saravana Kumar MSK said...

@பிரேம்குமார் : வாங்கண்ணா.. எப்படி இருக்கீங்க.. ஊர்ல தான் இருக்கீங்களா..
இன்னும் நிறைய வேலை இருக்கிறது முழுமையாக தளத்தை கொண்டுவர..
நன்றிங்க்னா பகிர்வுக்கும் வருகைக்கும்.

@gayathri : நன்றி தோழி பகிர்வுக்கும் வருகைக்கும்.

@logu.. : நன்றிங்க லோகு பகிர்வுக்கும் வருகைக்கும்.

@தமிழினி..... : வாங்க தோழி எப்படி இருக்கீங்க.. சில மாதங்களுக்கு பின் வந்து இருக்கீங்க.. மகிழ்ச்சி. :)

Lakshmi said...

hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html

divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

PLEASE CONSIDER OUR REQUEST

கவிநயா said...

//உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.//

நானும் ரசித்த வரிகள்...

மாதேவி said...

"துளி மழைக்காக
காத்திருக்கும்
பாறையிடுக்குத் தேரையின்
காத்திருப்பையொத்தது..
என்றாலும்
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு."நன்றாக இருக்கிறது.

  ©Template by Dicas Blogger.

TOPO