Thursday, February 12, 2009

கடவுளை கொலை செய்ய ஆயத்தமாகுதல்..


கடவுளை* கொலை செய்யவேண்டுமேன்ற
வெகுநாளைய யோசனையை
செயல்படுத்தவேண்டிய தருணம் வந்ததாக உணர்கிறேன்..
கடவுளை கொலை செய்ய
காரணங்கள் பெரிதாக இல்லையென்றாலும்
ஆர்வம் காரணமாகவே
இக்கொலை செய்ய உத்தேசித்துள்ளேன்..

ஆயத்தமாதலின் முதற்கட்டமாக
காலங்காலமாக கட்டமைக்கபட்டிருக்கும்
கடவுள் மீதான பயத்தையும்,
கொலை செய்யும் சில கணங்களுக்கு முன்பு
எழப்போகும் இரக்க உணர்வையும்,
முதன் கொலைக்கு பின்பாக எழப்போகும்
குற்ற உணர்ச்சியையும்,
ஆரம்பத்திலேயே என்னிலிருந்து பிரித்தெடுத்து
அறுபத்தியொன்பது பாலித்தீன் பைகளில் நிரப்பி புதைத்து விட்டேன்..

தேடியலைந்து
முப்பத்தியாறு சென்டிமீட்டர் நீளமுடைய
மிக அழகான கத்திகள் இரண்டும்
ஒரு மயிலிறகும் வாங்கி வைத்திருக்கிறேன்..

திட்டம் இதுதான்..
கடவுளை சந்திக்கையில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
நெஞ்சுக்கூடு முடியும் பள்ளத்தில் இதயத்தை நோக்கி
ஒரு கத்தி குத்தலும்,
சாவகாசமாக
வயிற்றில் ஆரம்பித்து சிறிநீரகம் வரையிலான
ஒரு குத்தி கிழித்தலும்,
பின்பாக கடவுளின் ரத்தத்தில்
சில புனைவுகளை எழுதி கடவுளை கலைத்து போடுதலும்..

12.02.2009


* கடவுள் - கடவுளர்கள்/மதங்கள்/புனிதங்கள்/அதிகாரங்கள்/வரலாறு இவற்றை குறிக்கும் குறியீடாகவும் கொள்ளலாம்.. எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்..
நான் பாவம்.. :)

1. நான் கடவுள் படம் கிளறிய உணர்வுகளும் இக்கவிதை எழுத ஒரு காரணமே..
2. பிரேம் - ரமேஷ் -இன் கொலை மற்றும் தற்கொலை பற்றி சிறு கவிதை தொகுப்பை பாதி படித்ததற்கே இப்போது எதை எழுதினாலும் கொலை வந்து சேருகிறது எழுத்தில்..
3.இன்று Charles Darwin-இன் இருநூறாவது பிறந்தநாள்..

27 Comments:

அருண்மொழிவர்மன் said...

இயலுமானால் கடவுளுடன் சேர்த்து கலாசார காவலர்களையும் சேர்த்து

அருண்மொழிவர்மன் said...

இயலுமானால் கடவுளுடன் சேர்த்து கலாசார காவலர்களையும் சேர்த்து

தமிழன்-கறுப்பி... said...

ஆக கட்டுடைத்தல் என்பதற்குள் நுழைந்தாயிற்று இனி பிரித்து மேய்தல்தான்...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இந்த கடவுளர்கள் தொல்லையும் சாமியார்கள் தொல்லையும் தாங்க முடியலைப்பா...;)

அது சரி said...

கடவுள் என்ற கழிசடையை
கொலை செய்து
கைகளை கறைப்படுத்த எனக்கு விருப்பமில்லை....

நீங்கள் கொலை செய்தால்
உங்களுக்கு கட் அவுட் வைக்கிறேன் :0))

அது சரி said...

முடிவெடுத்தாச்சில்ல, செயல்ல இறங்குங்க சரவணா....

அது சரி said...

ஆனா நீங்க கொஞ்சம் லேட்டுன்னு நினைக்கிறேன்...கடவுளை ஏற்கனவே கொன்னுட்டதா நீட்ஷே சொல்றாரு...(Thus Spake Zarathustra...)

கவின் said...

ரொம்பவே தில்லுதாங்க..

Saravana Kumar MSK said...

@அருண்மொழிவர்மன்
நன்றிங்க பகிர்வுக்கும் வருகைக்கும்..


@தமிழன்-கறுப்பி...
கோபத்தில் எழுதியதுதான்.. கட்டுடைக்க இன்னும் நாளாகும் போல.. :)


@அது சரி
எங்கண்ணா போனீங்க.. ஆளையே காணோம்..
கட் அவுட் எல்லாம் வேண்டாம்.. அன்பு மட்டும் போதும்..
நாமும் நம் பங்குக்கு ஒரு முறை கொலை செய்வோம்..


@கவின்
நானே ஒரு பயந்தாங்கொள்ளி.. இந்த கவிதையை எழுதியதால் ஆட்டோ வருமோ என்று பயந்து கொண்டு இருக்கிறேன்.. மேலும் கடவுளை நம்புகிறவர்களை புண்படுத்திடுமோ என்றும் பயபடுகிறேன்..

ஸ்ரீமதி said...

நல்ல கவிதை :)) நாட்டுக்கு ரொம்ப தேவையும் கூட.. :))

விஜய் said...

சரவணா, கடவுளைக் கொல்ல வேண்டுமென்றால், தன்னைத் தானே குத்திக் கொள்ள வேண்டியது தான். ஏனென்றால், கடவுள் உன்னிலும் இருக்கிறான்.

நான் கடவுள் படம், நன்றாக எடுக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் கடவுள் என்றால் அவன் இப்படித் தான் இருப்பான், என்று ஒரு தப்பான அபிப்ராயம் கொண்ட ஒரு பித்தனின் கதை.

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லாருக்கு.
தைரியமானக் கவிதை

TKB காந்தி said...

சரவணன், மிகவும் அழகான கவிதை. அந்த கடைசி பத்தி கடவுளின்மேலுள்ள உங்கள் கோபம் இன்னும் அழுத்தமாயிருந்திருக்கலாமோன்னு தோணுது.

உங்களின் தனிப்பட்ட சொல்லாடலே ரொம்ப அழகாயிருக்கு அப்படி எழுதியிருந்தாலும் அழகயிருந்திருக்கும்.

அன்புடன் அருணா said...

//பின்பாக கடவுளின் ரத்தத்தில்
சில புனைவுகளை எழுதி கடவுளை கலைத்து போடுதலும்//
இது ரொம்ப அழகு....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

நான் கடவுள் விமரிசனமோ எனப் பயந்து கொண்டே வந்தேன்....நல்ல வேளை தப்பித்தேன்....
அன்புடன் அருணா

தாமிரா said...

அன்புடன் அருணா said...
//பின்பாக கடவுளின் ரத்தத்தில்
சில புனைவுகளை எழுதி கடவுளை கலைத்து போடுதலும்//
இது ரொம்ப அழகு....
அன்புடன் அருணா

//ரிப்பீட்டு.!

Divyapriya said...

என்ன சொல்றதுன்னே தெரியல :(

Saravana Kumar MSK said...

@ஸ்ரீமதி
நன்றி ஸ்ரீ புரிதலுக்கு.. :)


@விஜய்
நன்றி விஜய்.. மேலும் நான் கடவுள் அல்ல.. :)
நான் கடவுளில் ருத்ரன் ஒரு இடையீடு மட்டுமே.. விளிம்பு நிலை மனிதர்கள்தான் கதை மாந்தர்கள்..


@ஆ.முத்துராமலிங்கம்
நன்றிங்க.. :)


@TKB காந்தி
நன்றி காந்தி.. கத்தி குத்துதலே வேண்டாமென்றுதான் நினைத்தேன் முதலில்.. ஆனால் கவிதை அவ்வாறாகவே எழுதி கொண்டது.. :)


@அன்புடன் அருணா
நன்றிங்க அக்கா.. எனக்கும் பிடித்த வரிகள்..
நல்ல தமிழ் திரைப்படங்கள் வரும்போது இந்த தளத்தில் அதை பற்றி எழுதுவேன்..


@தாமிரா
நன்றிங்க்னா.. :)


@Divyapriya
DP, எதாவது சொல்லிட்டு போங்க.. ;)

செல்வேந்திரன் said...

சரவணகுமார், கவிதை எழுதுவது என்று தீர்மானித்துவிட்டபின் டிஸ்கியெல்லாம் என்னத்துக்கு...?!

எழுத்தாளனுக்கு இருக்கக்கூடாதவைகளுள் முக்கியமானவை தயக்கமும்; அச்சமும்.

கவிதை நன்றாக இருந்தது.

பிரபு said...

எப்படி இப்படியெல்லம் யோசிக்கிறீங்க?!?!?!?!

ஸாவரியா said...

சரவணன்,..கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு, நல்லா இருக்குனு எனக்கு பொய் சொல்ல முடியல...

தேர்ந்த வார்த்தை பிரயோகம்...அழுத்தமான கருத்தைச் சொல்லும் உங்க நடை எல்லாம் நல்லா இருக்கு...

என்ன தான் நீங்க
//* கடவுள் - கடவுளர்கள்/மதங்கள்/புனிதங்கள்/அதிகாரங்கள்/வரலாறு இவற்றை குறிக்கும் குறியீடாகவும் கொள்ளலாம்..
எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்..
நான் பாவம்.. :)//

டிஸ்கியெல்லாம் போட்டாலும்

ஆனா,...கடவுள கொல்லர கவிதைய என்னால ஜீரணிக்க முடியல....உங்க தைரியம் பிடிச்சிருக்கு...ஆன கடவுள் ரொம்ப நல்லவருங்க.....உங்கள மாதிரியே..கட + உள் = கடவுள்...நம்மள கடந்து போய் பார்த்தா தான் கடவுள தரிசிக்க முடியும். அவர கொல்ல வேணாம்...அவர் எப்பவோ செத்துட்டாரு (நம்முள்ளே)

கவிதை ஆனா கருத்து.....ம்ம் என்ன சொல்லன்னு .தெரியல..

உங்க கவிதையா நான் புரிஞ்சுக்காததுக்கு மன்னிச்சிக்கோங்க...

ஆண்ட்ரு சுபாசு said...

வேண்டாம் நண்பரே ..நீங்கள் அவசரபடுகிறீர்கள்.கடவுள் என்பது ஒரு மிக பெரிய கானல் நீர் பிம்பம்.கொலை செய்வது எளிதல்ல ...நானும் எண் நண்பர்களும் 77 முறைக்கும் மேலே முயற்சிசெய்து தோற்று விட்டோம் ...இனி மெத்தனமாய் ..உங்கள் திடம் போல செயல் படுவதாய் இல்லை ..உங்களிடம் வேகம் உள்ளது ..நீங்களும் எங்களுடம் இணைந்து கொள்ளுங்கள்(கொல்லுங்கள்) ..

திட்டம் மிகச் சாதாரணம் ..நாம் கடவுளை சந்தித்து ..அவர் கோபப்பட்டு நெற்றிக்கண் திறக்கும் அளவுக்கு ..அவரை உசுப்பேத்தே வேண்டும் ...அப்படி அவர் சூடான நேரத்தில் நாம் தயாராக வைத்து இருக்கும் 99 லிட்டர் பெட்ரோலை அவர் மீது இட்டு அவரை தீக்கிரை ஆக்குகிறோம் ...

எப்படி ...?//


பெட்ரோல் விலை ஏறும் முன்னர் வாங்கி வைப்பது நல்லது

TKB காந்தி said...

//ஆனால் கவிதை அவ்வாறாகவே எழுதி கொண்டது//

என்னால முடியல, நல்லாயிருந்தது.

நிஜமா நல்லவன் said...

கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு!

Saravana Kumar MSK said...

@செல்வேந்திரன்
நன்றிங்க்னா முதல் பகிர்வுக்கும் கருத்துக்கும்.
முதன்முறையாக aggressive என்பதால் சின்ன பயம்


@பிரபு
தான வருதுங்க பிரபு.. எனக்கு ஒன்னும் இல்லையே??


@ஸாவரியா
//அவர் எப்பவோ செத்துட்டாரு (நம்முள்ளே)//
அட்டகாசம் அதிதி..
விரிவான வார்த்தைகளுக்கு ஸ்பெஷல் நன்றி.. புரியற மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.. :)


@ஆண்ட்ரு சுபாசு
அட்டகாசம் பண்றீங்க போங்க.. :)
முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.


@TKB காந்தி
கொஞ்சம் ஓவரா போயிடுச்சோ??!!!


@நிஜமா நல்லவன்
நன்றிங்க்னா.. :)

Mathu said...

கவிதை பிடிச்சிருக்கு...வழமை போலவே உங்களுக்குரிய ஸ்டைலில்...:)
ஒரு கணம் கண்மூடி யோசித்துவிட்டுதான் கமெண்ட் எழுத வந்தேன். கவிதை திறமை மட்டும் வர வர கூடிட்டு போது உங்களிடம்...ஆனா கொஞ்சம் violent ஆவே எழுதுறிங்களே சரவணா? கவிதை எழுதுறதில உங்களை மிஞ்சவே முடியாது...ஆனா, ஏன் இப்பிடி வார்த்தைகளாலேயே கஷ்டப்படுறிங்க? எது என்னவோ, கொலை, ரத்தம், கத்தி என்று எனக்கு பயமாவே இருந்திச்சு வாசிச்ச போது...

கார்க்கி said...

ஆவ்வ்வ்வ்வ்,,

வன்முறை.. வன்முறை..

:))))))

  ©Template by Dicas Blogger.

TOPO