Wednesday, February 11, 2009

இருபத்தி மூன்றாவது காதலர் தினம்...

அர்த்தமில்லாமல்
அகால வேளையில் பொழிவதாய்
அலுத்து கொள்கிறாய்
இந்த மழையை..

உன்னிடம்
காதலை சொல்ல முடியாமல்
வார்த்தைகளை
மென்று விழுங்கிகொண்டிருக்கும்
எனக்கு

இந்த மழை
வார்த்தைகளை கோர்த்து தருகிறது
என்று சொன்னால்
நீ நம்புவாயா??

ஒரு வேளை இந்த கவிதையை நீங்கள் படித்திருக்கலாம்.. என் ஆரம்ப கால கவிதைகளுள் ஒன்று.. மனசுக்கு நெருக்கமான கவிதை..


நான் பிறந்த பின்பு வரும் இருபத்தி மூன்றாவது காதலர் தினம்.. ஆனால் இதுவரை ஒரு காதலர் தினம் கூட கொண்டாடவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.. :(
எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம்.. ஒரு முறை கூட முழுமூச்சோடு முயற்சிக்கவில்லை.. சரி போகட்டும்.. அடுத்த வருட காதலர் தின பதிவாவது என் காதலியோடு சேர்ந்து எழுதுனும்.. அதுக்கு உங்க கிட்ட வேற என்ன கேட்க போறேன்.. வாழ்த்துக்கள் தான்.. :) (உன்னோட ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஃபினிஷிங் சரி இல்லையப்பா.)

எனக்கு அய்யனாரின் எழுத்துக்கள் மீதான போதை தீருவதாக இல்லை.. அவர் சோகமா எழுதினாலும், அவர் வார்த்தைகளை ரசித்து விட்டு வருகிறேன்.. என்ன ஒரு கொடூர மனம் எனக்கு.. அவர் அனுமதி இல்லாம அவரின் சில படிமங்களை எடுத்து, ஒரு காதல் கவிதை ஒன்று எழுதி இருக்கிறேன்.. படிச்சி பார்த்து சொல்லுங்க..
குறிப்புகளை பிரதியெடுத்தல் (அ) அய்யனாரின் படிமங்களை தொடருதல்..

நாம்
காதலுக்குள் விழ துவங்கியது முதல்
ஒரு புது உலகத்தை பிரசவிக்கலானோம்..

எல்லையற்ற பெருவெளியும்
எப்போதுமான மழையும்
தனிமையின் இசையும்
வயல்வெளிகளும்
கொன்றை மரங்களும்
பவளமல்லி பூக்களும்
பூவீன்ற அடர் நிற தீற்றல் கொண்ட பறவைகளும்
தூங்கும் ஏரிகளும்
பலநிற மீன்களும்
ஆகாயத் தாமரைகளும்
வனங்களில் அலையும் நீலியும்
அடர் கானகப் புலிகளும் அவற்றின் குகைகளும்
மட்டுமேயிருக்கும்
அவ்வுலகத்தில்
நாம்
காலங்களின் எல்லையுடைத்து
பரிமாறிக்கொண்ட
முத்தங்களின் குறிப்புகளை
பின்னொரு நாளில் பிரதியெடுக்க துவங்கினோம்..


11.02.2009

அப்படியே அய்யனாரின் சில காதல் கவிதைகள் பதிவையும் படிச்சிடுங்க.

எல்லோருக்கும் இதயம் கனிந்த Advanced காதலர் தின வாழ்த்துக்கள்..
குறிப்பாக காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு பொறாமையோடு காதலர் தின வாழ்த்துக்கள்.. :)

28 Comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துகிறேன்ங்க...
நானும் உங்களைப்போலதான்

விஜய் said...

\\நாம்
காதலுக்குள் விழ துவங்கியது முதல்
ஒரு புது உலகத்தை பிரசவிக்கலானோம்..\\
அழகான வரிகள்.

இருபத்திமூன்றாம் காதலர் தின வாழ்த்துக்கள். பிறந்தவுடனேயே காதலர் தினம் பற்றித் தெரிஞ்சிக்கிட்டீங்களா??? :-)

ஸ்ரீமதி said...

:))

அனுஜன்யா said...

சரா, இந்த உலகம் இன்னமும் உன்னை நம்புகிறதே! காதலர் தினத்தன்று உனக்கு குறைந்தது மூன்று நிகழ்ச்சி நிரல்கள் இருக்கும்னு தெரியும். ம்ம், நடத்து.

கோவிச்சுக்காதே சரா, நீ நல்ல பையன் என்று தெரியும் :).

அனுஜன்யா

gayathri said...

அடுத்த வருட காதலர் தின பதிவாவது என் காதலியோடு சேர்ந்து எழுதுனும்.. அதுக்கு உங்க கிட்ட வேற என்ன கேட்க போறேன்.. வாழ்த்துக்கள் தான்..

வாழ்த்துக்கள் saravnan

aduththa varusam enna .intha varusame ungaluku yaravathu propoes panna naan valthuren ok

TKB காந்தி said...

சரவணன், இந்த ஒரு வருசத்துல உங்க மனசுக்கேத்தவர் வருவாங்கன்னு தோணுது. கொஞ்சம் உஷாராவே இருங்க.

:)

ஸாவரியா said...

//எல்லோருக்கும் இதயம் கனிந்த Advanced காதலர் தின வாழ்த்துக்கள்..
குறிப்பாக காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு பொறாமையோடு காதலர் தின வாழ்த்துக்கள்.. :)//

Thanks Thanks Thanks ;) :-P

ஸாவரியா said...

ALL THE BEST! சரவணன்.. :))
உங்களுக்கான ராஜகுமாரி எப்பவோ பொறந்த்தாட்ச்சு... Just waiting for you to sweep her

ஸாவரியா said...

// விஜய் said...
\\நாம்
காதலுக்குள் விழ துவங்கியது முதல்
ஒரு புது உலகத்தை பிரசவிக்கலானோம்..\\
அழகான வரிகள்.

இருபத்திமூன்றாம் காதலர் தின வாழ்த்துக்கள். பிறந்தவுடனேயே காதலர் தினம் பற்றித் தெரிஞ்சிக்கிட்டீங்களா??? :-)//
அதான ?? :-0
சரியாச் சொன்னிங்க விஜய் :)

ஸாவரியா said...

Me the 10th :))

Karthik said...

எப்படிங்க இப்படி காதல் கவிதையை மழையா பொழியறீங்க, ஆனால் இன்னும் காதலிக்கலைங்கறீங்க?? என்னமோ என்னால முடியலைப்பா. ;)

கவிதை நல்லாருக்கு. Back to மழைக்காலம்???
:)

Karthik said...

//அடுத்த வருட காதலர் தின பதிவாவது என் காதலியோடு சேர்ந்து எழுதுனும்..

அவங்க தமிழ்தான்னு தெரியுமா?? அவங்க ஸ்பானிஷ்னா என்ன பண்ணுவீங்க? ;)

ம்ம்..நீங்க ஸ்பானிஷ்ல எழுதலாம். இல்லை அவங்களுக்கு தமிழ் கத்து தரலாம்.

Karthik said...

//குறிப்பாக காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு பொறாமையோடு காதலர் தின வாழ்த்துக்கள்.. :)

உங்களை மாதிரி கவிதை எழுத தெரிந்தவர்களுக்கு பொறாமையோடு காதலர் தின வாழ்த்துக்கள்..!

newspaanai.com said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

புதியவன் said...

//அடுத்த வருட காதலர் தின பதிவாவது என் காதலியோடு சேர்ந்து எழுதுனும்.. அதுக்கு உங்க கிட்ட வேற என்ன கேட்க போறேன்.. வாழ்த்துக்கள் தான்.. :)//

வாழ்த்துக்கள் சரவணா...

Saravana Kumar MSK said...

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி..என் இனமா நீங்கள்??
வாழ்த்திற்கு நன்றிங்க.. :)


@விஜய்
நன்றி..நாங்கெல்லாம் எப்போவும் கேடி.. :)


@ஸ்ரீமதி
நன்றி..இவ்ளோ பெரிசா எழுதினதுக்கு குட்டியா ஸ்மைலி போடுகிறாயே. திட்டனும் என்று தோன்றினாலும் திட்டிவிட்டே செல்லவும்.. :)


@அனுஜன்யா
நன்றி..இப்போவாச்சும் என்னை தெரிஞ்சிக்கிட்டீன்களே..


@gayathri
நன்றி காயூ.. கண் கலங்க வச்சிட்டீங்களே.. :)


@TKB காந்தி
நன்றி..உஷாராவே இருக்கிறேன்.. :)


@ஸாவரியா
நன்றி அதிதி.. நீங்க சொல்றீங்க.. தேடி பார்க்கிறேன் ராஜகுமாரியை.. :)


@Karthik
நன்றி.. நான் நிறைய காதலித்து இருக்கேன்.. என்னை தான் யாரும் காதலிக்கல.. அதான் காதல் தோல்வி.. :) இந்த மாதிரி கணக்கு வழக்கு இல்லாம காதலிச்சா கவிதை ஆட்டோமேட்டிகா வரும்..
அப்பறம்.. காதலுக்கு ஏது மொழி..


@புதியவன்
நன்றிங்க புதியவன்.. :)

ஸ்ரீமதி said...

Saravana u r tagged... go & see ma latest post.. :))

ஸ்ரீமதி said...

நான் ஏன் சரவணா திட்ட போறேன்?? :)) வாழ்த்துகள்.. :))

அன்புடன் அருணா said...

//காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு பொறாமையோடு காதலர் தின வாழ்த்துக்கள்.. //

hahaha....வாழ்த்துக்களில் கூட பொறாமையோடு வாழ்த்துக்களா??
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

பொறுமை பொறுமை சரவணா...இனிமேல் பிறக்கப் போவதில்லை....எற்கெனவே பிறந்திருப்பாள்...என்ன...meeting தான் லேட்டாகுது...வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா

தாமிரா said...

இரண்டு கவிதைகளும் அழகு.!

Divyapriya said...

//அடுத்த வருட காதலர் தின பதிவாவது என் காதலியோடு சேர்ந்து எழுதுனும்..//

அப்பவாவது சந்தோஷக் கவிதைகள் எழுதுப்பா :) அதுக்காகவே மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ;)

சரி நான் ஒரு கதை சொல்றேன்...ஒருத்தருக்கு 23 வயசே இன்னும் முடியலையாம்...அதுக்குள்ள -----
(plz fill in the blanks) ;)))

Saravana Kumar MSK said...

@ஸ்ரீமதி
புடிச்சு போட்டுட்டியா.. ஓகே.. எழுதிடுவோம்..
அப்பறம் திட்டலாம் என்றால், எந்த கருத்தாலும் சொல்லனும் என்பதற்காக சொன்னேன்.. :)


@அன்புடன் அருணா
வாழ்த்திற்கு நன்றி அக்கா..


@தாமிரா
ரசிப்பிற்கு நன்றி அண்ணா..


@Divyapriya said...
நானும் காதல் கொஞ்சும் கவிதைகள் எழுதனும்ன்னுதான் ஆசைபடறேன்.. பார்க்கலாம்.
//சரி நான் ஒரு கதை சொல்றேன்...ஒருத்தருக்கு 23 வயசே இன்னும் முடியலையாம்...அதுக்குள்ள -----(plz fill in the blanks) ;)))//
சரி.. சரி.. கணக்கு தவறலாம்.. எப்படியோ இருபத்தி மூன்றாவது காதலர் தினத்தை காதலியோடு கொண்டாடனும்.. அவ்ளோதான்.. :)

தமிழன்-கறுப்பி... said...

சரிப்பா...
நானும் எல்லோருக்கும குறிப்பா பொய் சொல்கிற உனக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்..:)

இனியவள் புனிதா said...

வாழ்த்துகள் சரவணா... :-)

Saravana Kumar MSK said...

@தமிழன்-கறுப்பி...
நன்றி.. ஆனா நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறெதுவும் இல்லை.. நம்புங்கப்பா.. ;)


@இனியவள் புனிதா
நன்றிங்க புனிதா..

கவிநயா said...

//அடுத்த வருட காதலர் தின பதிவாவது என் காதலியோடு சேர்ந்து எழுதுனும்.. அதுக்கு உங்க கிட்ட வேற என்ன கேட்க போறேன்.. வாழ்த்துக்கள் தான்.. //

வாழ்த்துகள் சரவணகுமார்.

உங்களுடைய ஆரம்பகால கவிதை அழகு :)

Boopathi Raja said...

Greetings

By - Boopathi Raja

  ©Template by Dicas Blogger.

TOPO