Friday, December 12, 2008

தவறி விழுதலும், சிதறல்களும்... (making things complicated)

எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..

எவ்வளவுதூரம் பத்திரப்படுத்தியும்
எப்படியெல்லாமோ பாதுகாத்தும்
ஒரு நொடிப்பொழுதில் எல்லாமும் விழுந்து
நொறுங்கி போகிறது..

எனக்கு மட்டும்
இப்படியெல்லாம் நிகழ்ந்து தொலைப்பதின்
காரணம் புரிவதே இல்லை.

கோபங்களும், எரிச்சல்களும், பொறாமைகளும்
மூளைக்குள் பொங்கி பெருகும் நேரங்களில்
என்னை கட்டுப்படுத்திகொள்வது
மிகவும் கடினமாயிருக்கிறது..

இசை கேட்கிறேன்..
இருக்கும் சில நண்பர்களிடம் வலிந்து பேசி சிரிக்கிறேன்..
புது மனிதர்களையும்
புது சூழல்களையும் தவிர்த்து
முடிந்தவரை என் உலகத்தை சுருக்கி கொள்கிறேன்..
கவிதைகளாய் தேடி படித்தும் திரைப்படங்களாய் பார்த்தும்
என் வன்மங்களை நீர்த்து போக முயற்சிக்கிறேன்..

நேர்மறையான
எண்ணங்களை உருவாக்கியும்
கற்பனை செய்தும்
என் நம்பிக்கைகளை நிரப்பி கொள்கிறேன்..

எனினும்
உள்ளிருக்கும் மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...

12.12.2008

80 Comments:

பாண்டித்துரை said...

எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...

கவிதை பற்றி சொல்ல வந்த வார்த்தைகள்

றி
வி
ழு
மோ என்று

Divya said...

\\உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...\\

:((

\\கோபங்களும், எரிச்சல்களும், பொறாமைகளும்
மூளைக்குள் பொங்கி பெருகும் நேரங்களில்
என்னை கட்டுப்படுத்திகொள்வது
மிகவும் கடினமாயிருக்கிறது..\\

யோகா.........ட்ரை பண்ணி பார்த்தீங்களா???

Divya said...

\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\

allignment......nalla irukku :)

அதிரை ஜமால் said...

\\உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...\\

என்னாங்க மிரட்ரீங்க...

அதிரை ஜமால் said...

\\Blogger Divya said...

\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\

allignment......nalla irukku :)\\

ஆமாம் ஆமாம்

அதிரை ஜமால் said...

\\கோபங்களும், எரிச்சல்களும்,\\

இவற்றை கட்டுபடுத்திவிடலாம்

இது (பொறாமைகளும்) இல்லையென்றால்

\\மூளைக்குள் பொங்கி பெருகும் நேரங்களில்
என்னை கட்டுப்படுத்திகொள்வது
மிகவும் கடினமாயிருக்கிறது..\\

Ravishna said...

/*இசை கேட்கிறேன்..
இருக்கும் சில நண்பர்களிடம் வலிந்து பேசி சிரிக்கிறேன்..
புது மனிதர்களையும்
புது சூழல்களையும் தவிர்த்து
முடிந்தவரை என் உலகத்தை சுருக்கி கொள்கிறேன்..
கவிதைகளாய் தேடி படித்தும் திரைப்படங்களாய் பார்த்தும்
என் வன்மங்களை நீர்த்து போக முயற்சிக்கிறேன்..
*/

நல்ல முயற்சி தன் நண்பரே...
நானும் கோவப் படும் போதெல்லாம் நன்கு கல கலவென சிரித்து விடுவேன்......

வாழ்த்துக்கள் தொடருங்கள்...
--ரவிஷ்னா

ஸ்ரீமதி said...

பயப்படாத சரவணா.. எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் எப்பவும் இருக்கத்தான் செய்யுது.. அதுக்கு பயந்தா அது நம்மள சாப்ட்டுடும்.. அத ஜெயிச்சு வெளில வா..

ஸ்ரீமதி said...

எப்பவுமே எதார்த்தமான நடை உன்னது... இந்த கவிதையில இன்னும் நல்லா வந்திருக்கு.. வாழ்த்துகள்.. :)

ஸ்ரீமதி said...

//எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..//

இது அழகு :))

gayathri said...

உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது

ennaga saravana neengale ithukelam payapadalama

Divyapriya said...

ரொம்ப ரொம்ப complex ஆ தான் இருக்கு...
உங்கள நினச்சா நிஜமாவே பயமாத் தான் இருக்கு...

//\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\//

இந்த alignment chaceless :)

ஆயில்யன் said...

//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது///

காதல் மிருகமா இருந்தா இப்படித்தான் டெரரா திங்குமாம்! :)

ஆயில்யன் said...

//Divya said...
\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\

allignment......nalla irukku :)
//

எஸ்ஸு!

சிதறுகிறது கூட

சி

று
கி

து

இப்படி டிரை பண்ணியிருந்திருக்கலாம்

எது எப்படியோ சிதறிடுச்சுல்ல !

ஆயில்யன் said...

ஆஹா நான் டிரை பண்ண அலைன்மெண்ட் சரியா வர்லப்பா சாரி பார் த டிஸ்டர்ப்னஸ் :(

ஆயில்யன் said...

//யோகா.........ட்ரை பண்ணி பார்த்தீங்களா???//

ஆமாம் !

அதுவும் கூட நல்ல விசயம்தான்!

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
பயப்படாத சரவணா.. எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் எப்பவும் இருக்கத்தான் செய்யுது.. அதுக்கு பயந்தா அது நம்மள சாப்ட்டுடும்.. அத ஜெயிச்சு வெளில வா..
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

உள்ளுக்குள் உறங்கும் மிருகம்

மிருகம் கொன்று மனிதம் வென்று

வெளியில வா!

அல்லது

வா வெளியே!

ஆயில்யன் said...

அப்படி வராட்டியும் கூடா நாங்கெலாம் கும்பலா வெளியே நின்னு கூப்பிடறோம் அப்படி கூப்பிட்டா கண்டிப்பா வந்துடும் !

ஆயில்யன் said...

//gayathri said...
உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது

ennaga saravana neengale ithukelam payapadalama
//

ஆமாங்க நீங்களே பயந்தா நாங்கெல்லாம்.....??

ஆயில்யன் said...

ஹய்ய்ய்யா!

மீ த இருபது !

நித்தி .. said...

எனக்கு மட்டும்
இப்படியெல்லாம் நிகழ்ந்து தொலைப்பதின்
காரணம் புரிவதே இல்லை.//

ithu ungalaku mattum illai saravana ellarkum apadithan bayapada onum illai...
just relax...
romba unmaiya irundathu unga pathivu ...
valthukal Ji....

Anonymous said...

வி
ழு
ந் கி
து று ற
சி த து..

Karthik said...

//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...

You're such a craftsman, Saravanakumar!
Terrific!

அன்புடன் அருணா said...

//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...//

மிருகம் பாதி...கடவுள் பாதி...சரவணன்....மிருகத்தைப் பார்த்து பயப்படும் போது கடவுளைப் பார்த்து நம்பிக்கையாயிருங்கள் சரவணன்

பிரேம்குமார் said...

//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...//

மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுருச்சா????? ம்ஹூம்... அதை சீக்கிரமே அடக்க ஏற்பாடு செய்யனும்

ஜி said...

//எனினும்
உள்ளிருக்கும் மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...
//

Erkanave ithe essencela oru kavithai onnu neenga ezuthunathu maathiri oru peeling...

Gud one though!!

Saravana Kumar MSK said...

@பாண்டித்துரை
//எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...
கவிதை பற்றி சொல்ல வந்த வார்த்தைகள்

றி
வி
ழு
மோ என்று//

பரவா இல்லை.. பயப்படாம சொல்லுங்க.. முதன் முறையா வந்து இருக்கீங்க..

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@Divya
//\\உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...\\
:((//

:(

//\\கோபங்களும், எரிச்சல்களும், பொறாமைகளும்
மூளைக்குள் பொங்கி பெருகும் நேரங்களில்
என்னை கட்டுப்படுத்திகொள்வது
மிகவும் கடினமாயிருக்கிறது..\\

யோகா.........ட்ரை பண்ணி பார்த்தீங்களா???//

இல்லீங்க திவ்யா.. ஆணிகள் மிக அதிகம்.. இரவு முழுதும் அலுவலகம் பின்பு காலையில் வீட்டில் தூக்கம் என்றே கழிகிறது வாழ்க்கை..

Saravana Kumar MSK said...

@Divya
//\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\

allignment......nalla irukku :)//

நன்றிங்க திவ்யா... :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@அதிரை ஜமால்
//\\உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...\\

என்னாங்க மிரட்ரீங்க...//

சும்மா.. ட்ரை பண்ணலாமேன்னு.. ;)

Saravana Kumar MSK said...

@அதிரை ஜமால்
//\\Blogger Divya said...
\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\
allignment......nalla irukku :)\
ஆமாம் ஆமாம்//

நன்றிங்க்னா.. :)

Saravana Kumar MSK said...

@அதிரை ஜமால்
//\\கோபங்களும், எரிச்சல்களும்,\\
இவற்றை கட்டுபடுத்திவிடலாம்
இது (பொறாமைகளும்) இல்லையென்றால்//

ஆமாம்.. ஆமாம்.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@Ravishna
\\/*இசை கேட்கிறேன்..
இருக்கும் சில நண்பர்களிடம் வலிந்து பேசி சிரிக்கிறேன்..
புது மனிதர்களையும்
புது சூழல்களையும் தவிர்த்து
முடிந்தவரை என் உலகத்தை சுருக்கி கொள்கிறேன்..
கவிதைகளாய் தேடி படித்தும் திரைப்படங்களாய் பார்த்தும்
என் வன்மங்களை நீர்த்து போக முயற்சிக்கிறேன்..
*/

நல்ல முயற்சி தன் நண்பரே...
நானும் கோவப் படும் போதெல்லாம் நன்கு கல கலவென சிரித்து விடுவேன்......
வாழ்த்துக்கள் தொடருங்கள்...\\

நன்றி நண்பா.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@ஸ்ரீமதி
\\பயப்படாத சரவணா.. எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் எப்பவும் இருக்கத்தான் செய்யுது.. அதுக்கு பயந்தா அது நம்மள சாப்ட்டுடும்.. அத ஜெயிச்சு வெளில வா..\\

அந்த மிருகத்தையும் நான் நேசிக்கிறேனே ஸ்ரீ.. :)

Saravana Kumar MSK said...

@ஸ்ரீமதி
//எப்பவுமே எதார்த்தமான நடை உன்னது... இந்த கவிதையில இன்னும் நல்லா வந்திருக்கு.. வாழ்த்துகள்.. :)//

நன்றி நன்றி.. :)

Saravana Kumar MSK said...

@ஸ்ரீமதி
////எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..//

இது அழகு :))//

நன்றி Sri.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@gayathri
//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது

ennaga saravana neengale ithukelam payapadalama//

ஐயோ.. நான் ஒன்னும் பெரிய ஆளு இல்லீங்க காயு.. எல்லாமே தப்பா போகும் போது கடுப்பா இருக்கு.. அவ்ளோதான்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@Divyapriya
//ரொம்ப ரொம்ப complex ஆ தான் இருக்கு...
உங்கள நினச்சா நிஜமாவே பயமாத் தான் இருக்கு...//

என்ன பார்த்து ஏன் பயப்படறீங்க திவ்யப்ரியா??

\\//\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\//

இந்த alignment chaceless :)\\

நன்றி.. நன்றி.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
\\//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது///

காதல் மிருகமா இருந்தா இப்படித்தான் டெரரா திங்குமாம்! :)\\

அப்படீங்களா.. எனக்கு தெரியாதுங்களேண்ணா.. ;)

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
\\//Divya said...
\எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..\
allignment......nalla irukku :)
//
எஸ்ஸு!

சிதறுகிறது கூட

சி

று
கி

து

இப்படி டிரை பண்ணியிருந்திருக்கலாம் \\

எது எப்படியோ சிதறிடுச்சுல்ல !\\

அட ஆமாம்.. :)

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
//ஆஹா நான் டிரை பண்ண அலைன்மெண்ட் சரியா வர்லப்பா சாரி பார் த டிஸ்டர்ப்னஸ் :(//

அப்படியெல்லாம் எதுவும் இல்லீங்கன்னா.. :)

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
//யோகா.........ட்ரை பண்ணி பார்த்தீங்களா???//

ஆமாம் !
அதுவும் கூட நல்ல விசயம்தான்!//

ஆணிகள் மிக அதிகம்.. இரவு முழுதும் அலுவலகம் பின்பு காலையில் வீட்டில் தூக்கம் என்றே கழிகிறது வாழ்க்கை.. அதனால் யோகவேல்லாம் இப்போதைக்கு ம்ஹும்.. :(

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
////ஸ்ரீமதி said...
பயப்படாத சரவணா.. எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் எப்பவும் இருக்கத்தான் செய்யுது.. அதுக்கு பயந்தா அது நம்மள சாப்ட்டுடும்.. அத ஜெயிச்சு வெளில வா..
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

உள்ளுக்குள் உறங்கும் மிருகம்
மிருகம் கொன்று மனிதம் வென்று
வெளியில வா!
அல்லது
வா வெளியே!//

முயற்சிக்கிறேன் அண்ணா.. :)

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
//அப்படி வராட்டியும் கூடா நாங்கெலாம் கும்பலா வெளியே நின்னு கூப்பிடறோம் அப்படி கூப்பிட்டா கண்டிப்பா வந்துடும் !//

கலக்கறீங்க போங்க.. :)

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
////gayathri said...
உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது

ennaga saravana neengale ithukelam payapadalama
//

ஆமாங்க நீங்களே பயந்தா நாங்கெல்லாம்.....??//

பெரியா ஆளுங்க பேசறா பேச்சா இது.. நீங்க தானுங்கா டெரர்.. :)

Saravana Kumar MSK said...

@ஆயில்யன்
//ஹய்ய்ய்யா!
மீ த இருபது !//

:))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@நித்தி ..
//எனக்கு மட்டும்
இப்படியெல்லாம் நிகழ்ந்து தொலைப்பதின்
காரணம் புரிவதே இல்லை.//

ithu ungalaku mattum illai saravana ellarkum apadithan bayapada onum illai...
just relax...//

புரிகிறது நித்தி.. :) இருந்தாலும்.....

//romba unmaiya irundathu unga pathivu ...
valthukal Ji....//

நன்றி நித்தி.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@Anonymous
//வி
ழு
ந் கி
து று ற
சி த து..//

இதுவும் நல்லாத்தான் இருக்கு.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@Karthik
\\//உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...

You're such a craftsman, Saravanakumar!
Terrific!\\

நன்றி கார்த்திக்.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@அன்புடன் அருணா
////உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...//

மிருகம் பாதி...கடவுள் பாதி...சரவணன்....மிருகத்தைப் பார்த்து பயப்படும் போது கடவுளைப் பார்த்து நம்பிக்கையாயிருங்கள் சரவணன்//

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி அக்கா. ஒரு விஷயம் சொல்லவா அக்கா.. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@பிரேம்குமார்
////உள்ளிருக்கும்
மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...//

மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுருச்சா????? ம்ஹூம்... அதை சீக்கிரமே அடக்க ஏற்பாடு செய்யனும்//

ஆமாம்.. ஆமாம்.. ஏதாவது செய்யணும்.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@ஜி
\\//எனினும்
உள்ளிருக்கும் மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...
//
Erkanave ithe essencela oru kavithai onnu neenga ezuthunathu maathiri oru peeling...\\

ஆமாம் ஜி.. ஆனால் அப்போதைக்கும் மற்றும் இப்போதைக்குமான வாழ்வில் எவ்வித மாற்றமுமில்லை.. அதே சூழல்.. அதே பிரச்சனை.. அதனால்தான்.. :)

//Gud one though!!//
நன்றிங்க்னா.. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

நித்தி .. said...

இப்படியெல்லாம் நிகழ்ந்து தொலைப்பதின்
காரணம் புரிவதே இல்லை.//

ithu ungalaku mattum illai saravana ellarkum apadithan bayapada onum illai...
just relax...//

புரிகிறது நித்தி.. :) இருந்தாலும்...

irunthalum enna iruthalum..enna thalaiva neenga...
ipadi ella commentskum porumaiya reply pannalae paathi tension korayum..
ungaluku music virupam irunthal niraiya music kelungalaen..
ithu romba palan tharum,manasa lesa aakkum...
enoda suya anubavam..
ellam sariya pogum..
tke it easy boss..
thanimaiya thivirthu vidunga...
thunayai chella pets um,music um vachikongalaen...

இனியவள் புனிதா said...

மறுமொழி பார்த்துத்தான் நான் இங்கே வந்தேன் சரவணா. ம்ம்ம் நான் இரசிச்சு செய்றத நீங்க கடமையா செய்யுறீங்க...யாருக்கில்லை
கோபம்...
சோகம்...
விரக்தி...
தோல்வி...
ஆனாலும் யதார்த்தமான எழுத்து நடை இரசிக்க வைக்குது. நிறைய எழுதுங்க
:-)

ஸாவரியா said...

//எல்லாமே தவறுகிறது..
தவறி
வி
ழு
ந்
து
சி தறு கி ற து..//

அது அப்படிதான் தோணும்..

//எவ்வளவுதூரம் பத்திரப்படுத்தியும்
எப்படியெல்லாமோ பாதுகாத்தும்
ஒரு நொடிப்பொழுதில் எல்லாமும் விழுந்து
நொறுங்கி போகிறது..//

இது நிதர்சனம்

//எனக்கு மட்டும்
இப்படியெல்லாம் நிகழ்ந்து தொலைப்பதின்
காரணம் புரிவதே இல்லை.//

நெஜமா சொல்லனுமுனா கொஞ்ச சில பேருக்கு இப்படித் தான் இருக்கு

//கோபங்களும், எரிச்சல்களும், பொறாமைகளும்
மூளைக்குள் பொங்கி பெருகும் நேரங்களில்
என்னை கட்டுப்படுத்திகொள்வது
மிகவும் கடினமாயிருக்கிறது..
//
I Hear You!

//இசை கேட்கிறேன்..
இருக்கும் சில நண்பர்களிடம் வலிந்து பேசி சிரிக்கிறேன்..
புது மனிதர்களையும்
புது சூழல்களையும் தவிர்த்து
முடிந்தவரை என் உலகத்தை சுருக்கி கொள்கிறேன்..
கவிதைகளாய் தேடி படித்தும் திரைப்படங்களாய் பார்த்தும்
என் வன்மங்களை நீர்த்து போக முயற்சிக்கிறேன்..

நேர்மறையான
எண்ணங்களை உருவாக்கியும்
கற்பனை செய்தும்
என் நம்பிக்கைகளை நிரப்பி கொள்கிறேன்..

எனினும்
உள்ளிருக்கும் மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...//

மிருகம் சிரிக்குதா,..அப்போ அது மிருகம் இல்ல மனுஷன்...இது EVOLUTION காலம் இன்னும் சில நாளுல நீங்க ஒரு அழகான பட்டம்பூச்சியாய் மாறி அழகா பறந்து வருவீங்க..நம்புங்க...அப்போ சிதறி விழற மாதிரி இருந்தாலும் தாங்கிக் கொள்ள நேச உள்ளமோ,...இல்லை காதல் காரிகையோ..துணை இருப்பாங்க..எனக்கு நம்பிக்கை இருக்கு,...ம்ம்...உங்களுக்கு :)

Saravana Kumar MSK said...

@நித்தி ..
//irunthalum enna iruthalum..enna thalaiva neenga...
ipadi ella commentskum porumaiya reply pannalae paathi tension korayum..
ungaluku music virupam irunthal niraiya music kelungalaen..
ithu romba palan tharum,manasa lesa aakkum...
enoda suya anubavam..
ellam sariya pogum..
tke it easy boss..
thanimaiya thivirthu vidunga...
thunayai chella pets um,music um vachikongalaen...//

நிச்சயம் நினைவில் கொள்கிறேன்.. மிக்க நன்றி நித்தி..

அப்பறம் இன்னொரு சின்ன வேண்டுகோள்.. இந்த சின்ன பையன, ஜி என்றோ அல்லது தலைவா என்றோ கூப்பிடாதீங்க.. ரொம்ப பெரிய ஆளை கூப்பிடுவது போலிருக்கிறது.. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@இனியவள் புனிதா
//மறுமொழி பார்த்துத்தான் நான் இங்கே வந்தேன் சரவணா. ம்ம்ம் நான் இரசிச்சு செய்றத நீங்க கடமையா செய்யுறீங்க...யாருக்கில்லை
கோபம்...
சோகம்...
விரக்தி...
தோல்வி...
ஆனாலும் யதார்த்தமான எழுத்து நடை இரசிக்க வைக்குது. நிறைய எழுதுங்க
:-)//

எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கு.. எனக்கு கண்டினியுஸா இருக்கு.. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@ஸாவரியா

//I Hear You!//

மிக்க நன்றி..

ஸாவரியா.. ஒவ்வொரு முறையும் உங்கள் பின்னூட்டத்தில் பிரமிக்க வைக்கறீங்க..
உங்கள் பின்னூட்டங்களின் படி, நீங்கள் வாழ்க்கையை அணுகும் முறை, பிரம்மிப்பா இருக்கு.. ரொம்ப inspiring-ஆவும் இருக்கு..

//மிருகம் சிரிக்குதா,..அப்போ அது மிருகம் இல்ல மனுஷன்...இது EVOLUTION காலம் இன்னும் சில நாளுல நீங்க ஒரு அழகான பட்டம்பூச்சியாய் மாறி அழகா பறந்து வருவீங்க..//

இந்த வரிகளை படித்ததும் உண்மையிலே சிறகு முளைத்தது..

இந்த வரிகளை எப்படி எழுதுனீங்க.. its amaZing.. இதை படித்ததும், நீங்க உங்க எழுத்தை ரொம்ப சின்ன வட்டத்தில வச்சி இருக்கீங்க என்றே தோன்றியது.. நீங்க இன்னும் நெறைய எழுதனும்.. கவிதை மட்டுமில்லை.. உங்கள் வார்த்தைகளை அடுக்கிய அந்த வடிவம் மிக அழகாய் இருந்தது..

//அப்போ சிதறி விழற மாதிரி இருந்தாலும் தாங்கிக் கொள்ள நேச உள்ளமோ,...இல்லை காதல் காரிகையோ..துணை இருப்பாங்க..எனக்கு நம்பிக்கை இருக்கு,...ம்ம்...உங்களுக்கு :)//

ம்ம்.. இப்போ எனக்கும் அப்படிதான் தோணுது..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

ஸாவரியா said...

//
//மிருகம் சிரிக்குதா,..அப்போ அது மிருகம் இல்ல மனுஷன்...இது EVOLUTION காலம் இன்னும் சில நாளுல நீங்க ஒரு அழகான பட்டம்பூச்சியாய் மாறி அழகா பறந்து வருவீங்க..//

இந்த வரிகளை படித்ததும் உண்மையிலே சிறகு முளைத்தது..

இந்த வரிகளை எப்படி எழுதுனீங்க.. its amaZing..//
*//
ஓ....
அதுவா...அன்னிக்கு பயலாஜி கிளாசுல நா தூங்கலன்னு அர்த்தம்.. (Just kidding..Thanks for your comments :)) )

நானும் நடந்து(வளர்ந்து) வந்த வழி(வலி) தான,.. :)))

சும்மா,..இதெல்லாம் இல்லாம வாழ்க்கையா,..சே போரடிச்சிடும் தெரியுமா..அப்பறம் இன்னொரு விஷயம்,..கடவுள் நமக்கு ஏன் கஷ்டங்கள் கொடுக்கிறார் தெரியுமா...அப்போ தான் நாம அது போல் கஷ்டப் படறவங்கள பாக்கிறப்போ கனிவா இருப்போமா..ம்ம்ம்ம்..நெஜமத்தான் சொல்றேன்.
சரவணனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தெரியும்,..இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச LOGIC சொல்ரேன் :))

என் கருத்தோட ஒத்துகனும்னு அவசியமில்ல..நினைவுல வச்சுக்கோங்க,...:))

அன்பு சினேகிதி
ஸாவரியா

logu.. said...

நேர்மறையான
எண்ணங்களை உருவாக்கியும்
கற்பனை செய்தும்
என் நம்பிக்கைகளை நிரப்பி கொள்கிறேன்..

Appadiye continue pannunga..

ethuvum onnum pannamudiathu..

தமிழ் தோழி said...

அருமை:))

விஜய் said...

ஏம்பா இப்படி சோக கீதமே பாடறீங்க?
உற்சாகமா ஏதாவது சொல்லக் கூடாதா?
இந்தக் கவிதை வரிகள் சரவணகுமாரின் மனதில் உதிக்கும் நிஜமான எண்ணங்களா, இல்லை ஒரு கற்பனை மனிதனில் உதிக்கும் எண்ணங்களா.
இரண்டாவது வகையானால் பரவாகயில்லை. ஆனால் நிஜ சரவணகுமார் மனதில் இப்படியே எண்ணங்கள் இருந்தால் ரொம்ப ஆபத்து. திவ்யா சொன்னது போல் யோக முயற்சி செய்து பாருங்கள்.

கவின் said...

:)

அது சரி said...

//
உள்ளிருக்கும் மிருகமோ
மிக அமைதியாய் சிரிக்கிறது..
எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது...
//

என்னப் பத்தி எழுதி எதுனா காமெடி கீமெடி பண்ணலியே? :))

கவிதை அழகா இருக்கு...உங்களுக்கு பேசாம "இகதா"ன்னு பட்டம் கொடுக்கலாம்...

இகதா...என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்!

Saravana Kumar MSK said...

@ஸாவரியா
//ஓ....
அதுவா...அன்னிக்கு பயலாஜி கிளாசுல நா தூங்கலன்னு அர்த்தம்.. //
மறுபடியும் மறுபடியும் கலக்கறீங்க..

//நானும் நடந்து(வளர்ந்து) வந்த வழி(வலி) தான,.. :)))
சும்மா,..இதெல்லாம் இல்லாம வாழ்க்கையா,..சே போரடிச்சிடும் தெரியுமா..அப்பறம் இன்னொரு விஷயம்,..கடவுள் நமக்கு ஏன் கஷ்டங்கள் கொடுக்கிறார் தெரியுமா...அப்போ தான் நாம அது போல் கஷ்டப் படறவங்கள பாக்கிறப்போ கனிவா இருப்போமா..ம்ம்ம்ம்..நெஜமத்தான் சொல்றேன்.
சரவணனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தெரியும்,..இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச LOGIC சொல்ரேன் :))
என் கருத்தோட ஒத்துகனும்னு அவசியமில்ல..நினைவுல வச்சுக்கோங்க,...:))//

நிச்சயம் நினைவில் கொள்கிறேன் அன்புதோழி.. :)

Saravana Kumar MSK said...

@logu..
//Appadiye continue pannunga..
ethuvum onnum pannamudiathu..//

நன்றி நண்பரே.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@தமிழ் தோழி
//அருமை:))//

நன்றிங்க.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@விஜய்
//ஏம்பா இப்படி சோக கீதமே பாடறீங்க?
உற்சாகமா ஏதாவது சொல்லக் கூடாதா? இந்தக் கவிதை வரிகள் சரவணகுமாரின் மனதில் உதிக்கும் நிஜமான எண்ணங்களா, இல்லை ஒரு கற்பனை மனிதனில் உதிக்கும் எண்ணங்களா. இரண்டாவது வகையானால் பரவாகயில்லை. ஆனால் நிஜ சரவணகுமார் மனதில் இப்படியே எண்ணங்கள் இருந்தால் ரொம்ப ஆபத்து.//
உற்சாகமா ஏதாவது இருந்தா எழுதாம இருப்பேனா??

//திவ்யா சொன்னது போல் யோக முயற்சி செய்து பாருங்கள்.//
நிச்சயம் முயற்சிக்கிறேன்.. :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@கவின்
//:)//
:)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@அது சரி
//என்னப் பத்தி எழுதி எதுனா காமெடி கீமெடி பண்ணலியே? :))//

நான் எப்பவுமே பெரிய தலைகளை வம்புக்கு இழுப்பதில்லை.. :)

//கவிதை அழகா இருக்கு...உங்களுக்கு பேசாம "இகதா"ன்னு பட்டம் கொடுக்கலாம்...
இகதா...என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்!//

அண்ணே.. எனக்கு சத்தியமா விளங்கல.. நீங்களே சொல்லிடுங்க..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

கவிநயா said...

//எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கு.. எனக்கு கண்டினியுஸா இருக்கு.. :)//

என் கவிதை படிச்சிட்டு ஏன் அப்படிக் கமெண்ட்டினீங்கன்னு இப்பதானே தெரியுது :) இருள் இருந்தா பின்னாடியே விடியல் வருதுன்னுதான் பொருள். என்ன, கொஞ்சம் நேரம் ஆகலாம். என்ன செய்யறது? காத்திருப்போம்... நம்பிக்கையோட... அப்பப்ப கவிதை எழுதிக்கிட்டு... :)

கவிதை அழகு.

Saravana Kumar MSK said...

@கவிநயா

//என் கவிதை படிச்சிட்டு ஏன் அப்படிக் கமெண்ட்டினீங்கன்னு இப்பதானே தெரியுது :) இருள் இருந்தா பின்னாடியே விடியல் வருதுன்னுதான் பொருள். என்ன, கொஞ்சம் நேரம் ஆகலாம். என்ன செய்யறது? காத்திருப்போம்... நம்பிக்கையோட... அப்பப்ப கவிதை எழுதிக்கிட்டு... :)

கவிதை அழகு.//

நன்றிங்க கவிநயா.. வேறு என்ன செய்து விட முடியும்??
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Mathu said...

நல்லா இருக்கு கவிதை...பயப்படாதிங்க. :)All the best!

தமிழன்-கறுப்பி... said...

cool மச்சி...
நாங்க இருக்கோம்ல...

தமிழன்-கறுப்பி... said...
This post has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

நிறையப்பேசுங்க சரவணன்...

புரிதல் அவசியம்...

Saravana Kumar MSK said...

@Mathu
//நல்லா இருக்கு கவிதை...பயப்படாதிங்க. :)All the best!//

நன்றி மது..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

Saravana Kumar MSK said...

@தமிழன்-கறுப்பி...
//cool மச்சி...
நாங்க இருக்கோம்ல...//
நன்றிங்க்னா.. :)

//நிறையப்பேசுங்க சரவணன்...
புரிதல் அவசியம்...//
முயற்சிக்கிறேன்.. :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.

நிஜமா நல்லவன் said...

/யோகா.........ட்ரை பண்ணி பார்த்தீங்களா???/

ரிப்பீட்டேய்...!

ரகசிய சிநேகிதி said...

இப்பொழுதான் நேரத்தை தேடிப் பிடித்து, தங்கள் கவிதைகளைப் படிக்க/ ரசிக்க தொடங்குகிறேன்.. நானும் இந்தச் சிதறல்களை மிக அழகாய் உணர்கிறேன்..கவிதை அருமை சரவணக் குமார்... வாழ்த்துகள்!!

  ©Template by Dicas Blogger.

TOPO